குஜராத்தில உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு பெண் நிர்வாகிகளிடம் இரண்டாவது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. பெங்களூருவைச் சேர்ந்த நித்யானந்தாவின் செயலாளர்களில் ஒருவரான ஜனார்த்தனன் சர்மா புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் 21, 19, 15 வயது மகள்கள் மற்றும் 13 வயது மகன் ஆகியோரை பெங்களூருவில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் கல்வி பயிலுவதற்காக ஜனார்த்தனன் சர்மா சேர்த்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், ஜனார்த்தனின் மகள்களும், மகனும், குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் புறநகரில் ஹிராபூரில் உள்ள நித்தியானந்தாவுக்கு சொந்தமான யோகினி சவாஜ்னாபீடம் ஆசிரமத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

incident

மேலும் நித்யானந்தாவால் நிர்வகிக்கப்படும் இந்த ஆசிரமத்தில் 50 க்கும் அதிகமான குழந்தைகள் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தப்பட்டதாக புகார் எழுந்துவந்த நிலையில் ஜனார்த்தனன் சர்மாவின் குற்றச்சாட்டு அனைத்து தரப்பிற்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனது மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகனை நித்யானந்தாவின் பெங்களூர் ஆசிரமத்தில் சேர்த்தேன். அதனையடுத்து, அவர்களில் 2 பேர் மட்டும் அஹமதாபாத் ஆசிரமத்துக்கு இடமாற்றப்பட்டனர். இதில், எனது இரண்டு மகள்கள் மீட்கப்பட்டனர்,.ஆனால் இன்னும் ஒரு மகளை நித்யானந்தா தனது பெங்களூர் பிடதி ஆசிரமத்தில் அடைந்து வைத்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

incident

Advertisment

Advertisment

இந்நிலையில், சர்மாவின் மற்றொரு மகள் நித்தியானந்தா ஆசிரமம் குறித்து சில தகவல்கள், பிரபல தனியார் தொலைக்காட்சிக்குத் தெரிவித்துள்ளார். அதில், தன் முகத்தை மறைத்தபடி பேசிய அவர், 'ஆண்டாள்' குறித்த கருத்து தெரிவித்த கவிஞர் வைரமுத்துவை திட்டச் சொல்லிக் கெட்ட வார்த்தைகள் சொல்லிக் கொடுத்ததே நித்யானந்தா தான் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த புகாரை அடுத்து ஆசிரமத்தில் போலீசார் சோதனை நடத்தினர். ஆனால், காணாமல்போனதாக சொல்லப்பட்ட சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அப்பெண்ணின் புகாரை அடுத்து போலீஸார், நித்யானந்தா ஆசிரமத்தில், ப்ராணப் பிரியா, பிரியா தத்துவா உள்ளிட்ட நிர்வாகிகள் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளன.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.