திருமணமான பெண்ணை அதிமுக பிரமுகர் ஒருவர் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் முதுநகர் சாலக்கரையை சேர்ந்தவர் அம்சவள்ளி. இவருக்கு வயது 35 வயது. இவர் கடலூர் மாவட்ட காவல் ஆணையர் அலுவலத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், எனது கணவர் சரவணன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் வினோத்ராஜ் என்பவர் என்னுடன் நட்பாக பழகி வந்தார். நானும் உறவினர் என்பதால் நட்பாக பழகி பேசி வந்தேன். ஆனால் என்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தி ஏமாற்றிவிட்டார் என்று கூறியுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/17_18.jpg)
ஒருமுறை கடலூரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு என்னை வரவழைத்து அங்கு வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் அதை வீடியோவாக எடுத்து என்னை மிரட்ட ஆரம்பித்துவிட்டார். இதனால் அடிக்கடி என்னிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அதனால் என் கணவர் அனுப்பிய பணம் மற்றும் நான் ஊரில் இருப்பவர்களிடம் கடன் வாங்கி இதுவரை அவருக்கு ஒரு கோடி ரூபாய் வரை கொடுத்து இருக்கிறேன்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
தற்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கவுன்சிலர் பதவி வேண்டும் என்பதற்காகக் கடலூரில் உள்ள அதிமுக பிரமுகர்களுடன் பாலியல் ரீதியாக தொடர்பு கொள்ளுமாறு என்னை அந்த வீடியோவை காட்டி மிரட்டி வருகிறார். இதுகுறித்து ஊர் பஞ்சாயத்தில் புகார் அளித்தேன், அவர்கள் எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் இருந்தனர். இதனை தொடர்ந்து என்னை மிரட்டி வெள்ளைத்தாளில் கையெழுத்து வாங்கி கொண்டார். மேலும் என்னையும் என் குழந்தைகளையும் கொன்றுவிடுவதாக மிரட்டினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஆளும்கட்சியின் முன்னாள் கவன்சிலர் பாலியல் பலாத்காரம் செய்து பெண்ணை மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)