ADVERTISEMENT

பொன் ராதாகிருஷ்ணனை நிறுத்திய கேரள காவல்துறை எஸ்.பி. யார்? அவர் இவ்வாறு நடந்துகொள்வது இதுதான் முதல் முறையா...?

06:10 PM Nov 23, 2018 | tarivazhagan

‘யதீஷ் சந்திரா’ என்பதுதான் அந்த காவல்துறை அதிகாரியின் பெயர். இவருக்கும், மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்குமிடையே நடந்த வாக்குவாதம் சமூக ஊடகங்களிலும், இளையதலைமுறையினர் மத்தியிலும் அதிகமாக பேசு பொருளாக மாறியுள்ளது. யதீஷ் சந்திரா இதுபோல் நடந்துகொள்வதும், அவரைப் பற்றி பொதுவெளியில் பேசப்படுவதும் இது முதல் முறை அல்ல. இவர் பிறந்து, வளர்ந்தது எல்லாம் கர்நாடகா மாநிலம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

2010-ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில், அகில இந்திய அளவில் 211-ம் இடம் பிடித்தார். 2015-ம் ஆண்டு கேரள மாநிலத்தில் பணியமர்த்தப்பட்டார். இவர் பொறுப்பேற்றிருந்தபோது கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி நடைப்பெற்றுக்கொண்டிருந்தது. கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கட்சியாக இருந்தது. அப்போது கம்யூனிஸ்ட் கட்சினர், ஆளும் காங்கிரஸ் கட்சினருக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். அப்போது தடியடி நடத்தி கூட்டத்தை களைத்து பெரும் சர்ச்சையில் சிக்கினார் யதீஷ் சந்திரா.


இந்த சம்பவம் தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கேரளாவின் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் இவரை ‘மேட் டாக்’ என்று விமர்சித்தார். அதே பிரச்சனையில், இப்போதிருக்கும் முதல்வர் பினராய் விஜயன், யதீஷ் சந்திராவை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்திருந்தார்.


இந்த பிரச்சனை ஒருபுறமிருக்க கேரளாவில் 2016-ம் ஆண்டு ஆட்சி மாறியது. கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி பொறுப்பில் அமர்ந்தது. யதீஷ் சந்திராவை இடைநீக்கம் செய்ய கோரிக்கை வைத்த பினராய் விஜயன் முதல்வர் பொறுப்பேற்றறார். அதன்பின் 2017-ல் எர்ணாகுளம் மாவட்ட காவல்துறை துணை ஆணையராக நியமிக்கப்படுகிறார் யதீஷ் சந்திரா. துணை ஆணையராக பொறுப்பேற்ற சில மாதங்களில் ‘புதுவீப்’ (puthuvype) எனும் இடத்தில் உயர்நீதிமன்றம் முன்னால், எல்பிஜி குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தினார்கள். அதிலும் தடியடி நடத்தி கூட்டததை களைத்துள்ளார். இது எல்லாவற்றிர்க்கும் அவர் அளித்த பதில் ‘நான் என் கடமையை செய்கிறேன்’ என்பதே.

இந்த பிரச்சனைகள் எல்லாம் இருக்க, தற்போது மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வந்த காரை நிறுத்தி, ‘விஐபி கார்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. அதனால் நீங்கள், உங்கள் காரை மட்டும் எடுத்து செல்லலாம். மற்றபடி உங்கள் உடன் வந்தவர்களின் கார்களை எடுத்து செல்ல அனுமதி இல்லை. மேலே கார்கள் நிறுத்தும் இடம் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அதிக அளவு பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் நில சரிவு ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது, அதனால் அவர்களின் கார்களை அனுமதிக்க முடியாது’ என்று கூறியிருந்தார். இந்த பிரச்னை தொடர்பாக யதீஷ் சந்திரா மீது வழக்கு தொடுப்பதைப் பற்றி பின்னர் யோசித்து முடிவெடுப்போம் என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT