sab

Advertisment

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வந்ததால், நடை திறந்தபொழுது பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்தது. இந்நிலையில் சபரிமலையில் நடந்த போராட்டங்கள் அண்மையில் முடித்துக்கொள்ளப்பட்டது. இதனால் போலீசாரின் கெடுபிடிகளும் குறைந்தது. இதையடுத்து சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரித்ததுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 67 ஆயிரத்து 44 பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர். மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்ட பின் நேற்று தான் அதிகளவில் பக்தர்கள் குவிந்துள்ளனர். அதிகளவில் பத்தர்கள் குவிந்ததால் சன்னிதானத்தில் 18-ம் படி ஏற 3 மணி நேரம் காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டது.