ADVERTISEMENT

"கஸ்தூரி செய்த நூலிழை தவறு ; யாரு எது செஞ்சாலும் கட்சி பொறுப்பேற்க வேண்டுமா...? ” - திருப்பதி நாராயணன் கேள்வி

07:41 PM Nov 29, 2022 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பாஜகவிலிருந்த திருச்சி சூர்யா சில தினங்களுக்கு முன்பு அக்கட்சியின் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த டெய்சி என்பவரோடு பேசிய பேச்சுக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த விவகாரத்தில் திருச்சி சூர்யாவைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்த அக்கட்சியைச் சேர்ந்த காயத்ரி ரகுராம்-ஐ கட்சியிலிருந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நீக்கினார்.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் இதுதொடர்பாக ட்விட் செய்திருந்த நடிகை கஸ்தூரி பாஜகவில் யாராவது அக்கா தம்பி என்றால் நம்பி விடாதீர்கள் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரின் இந்தக் கருத்து தொடர்பாக பாஜக துணைத்தலைவர் திருப்பதி நாராயணனிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம்.

நம்முடைய கேள்விக்கு அவரின் பதில் வருமாறு, " கஸ்தூரியின் அனைத்து ட்விட்டர் கருத்துக்களை எப்போதும் பார்ப்பேன். அது எப்போது நியாயத்தை வெளிப்படுத்தும் விதமாகவே இருந்துள்ளது. இந்தக் கருத்து மட்டும் அல்ல, இதற்கு முன்பு அவர் தெரிவித்த அனைத்து கருத்துக்களின் அடிப்படையிலும் இதைச் சொல்கிறேன். அவருடைய இந்தக் கருத்தில் மட்டும் கஸ்தூரி ஒரு நூலிழை தவறு செய்துவிட்டதாகவே பார்க்கிறேன். ஒவ்வொரு தனிமனிதர்கள் செய்கின்ற தவற்றுக்கெல்லாம் கட்சி பொறுப்பேற்க முடியாது. இது எங்கள் கட்சிக்கு மட்டும் இல்லை, அனைத்துக் கட்சிகளுக்கும் இது பொருந்தும்.

ஒரு திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலியல் வழக்கில் கைதாகி சிறை சென்றுள்ளார். இதற்கு திமுக பொறுப்பேற்றுக்கொள்ள முடியுமா? இது தனிப்பட்ட மனிதர்கள் செய்கின்ற தவறாகத்தான் பார்க்க வேண்டும். நான் இதில் திமுகவை மட்டும் குற்றம் சொல்கிறேன் என்று பார்க்க வேண்டாம். அதிமுகவை எடுத்துக்கொள்ளுங்கள், காங்கிரஸ் கட்சியை எடுத்துக்கொள்ளுங்கள், சில இடங்களில் கொலை வரை சென்ற சம்பவங்களை எல்லாம் நாம் பார்த்து வருகிறோம். இது இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சிகளிலும் நடக்கிறது. தனி மனிதன் பேசினாலே அதற்குக் கட்சி பொறுப்பு என்பது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று தெரியவில்லை.

திமுகவில் சைதை சாதிக் என்ற ஒரு நபர் மிகப்பெரிய அளவில் ஆபாசமாகப் பேசினார். அவர் மீது கட்சி என்ன நடவடிக்கை எடுத்தது. நீங்கள் வழக்குப் பதிவு செய்துள்ளார்களே என்று கேட்கிறீர்கள், இது ஒரு போதுமான நடவடிக்கையா? உங்களுக்கு இது முதலில் திருப்தி ஏற்படுத்துகிறதா? இந்த விவகாரமாவது இரண்டு தனிப்பட்ட நபர்களுக்கு இடையே நடைபெற்ற தொலைப்பேசி உரையாடல். ஆனால் சைதை சாதிக் பொதுக்கூட்டத்தில் இவ்வாறு தரம் தாழ்ந்து விமர்சனம் செய்துள்ளார். இதை திமுக ஆதரிக்கிறது என்று சொல்வீர்களா? தனிப்பட்ட பேச்சுகளுக்கு இவ்வளவு கேள்விகளை பாஜகவை பார்த்துக் கேட்கும் நபர்கள் திமுகவைச் சேர்ந்த இவரின் நடவடிக்கைக்கு போதுமான நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT