publive-image

தமிழ்நாடு நகர்ப்புறத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்துமுடிந்தது. அன்று பதிவான வாக்குகள் நேற்று (22ஆம் தேதி) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது. அதேபோல், 138 நகராட்சிகளில் 132 நகராட்சிகளையும், 489 பேரூராட்சிகளில் 435 பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியது.

Advertisment

இந்த நகர்ப்புறத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாஜக குறிப்பிடத்தக்க வார்டுகளைக் கைப்பற்றியுள்ளது. அதனைத் தொடர்ந்து நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தமிழ்நாடு தலைவர், “பா.ஜ.க.வின் வலிமையை உணர்த்துவதற்காக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டோம். அ.தி.மு.க.வுடனான தேசிய கூட்டணி தொடரும்; பா.ஜ.க. வலிமைப் பெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு தேர்தலில் அ.தி.மு.க. பின் தங்கிவிட்டதால் குறைத்து மதிப்பிடக் கூடாது. பா.ஜ.க.வை முழுமையாக ஏற்று எங்களுடன் பயணிக்க மக்கள் தயாராகிவிட்டனர். கடின உழைப்பால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது இடத்திற்கு பா.ஜ.க. வந்துள்ளது” என்று தெரிவித்தார்.

Advertisment

இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “என்னை தொலைபேசியில் அழைத்து, நமது காரியகர்த்தாக்கள் அனைவரின் கடின உழைப்பைப் பாராட்டியதற்காகமாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு, மனம் கனிந்த நன்றிகள். மாண்புமிகு பிரதமர் மீது நமது தமிழ் மக்கள் வைத்திருக்கும் அன்பின் பிரதிபலிப்பே பாஜக வேட்பாளர்களின் வெற்றியும், அதிகரித்த வாக்கு சதவீதமும்” என்று பதிவிட்டுள்ளார்.

Advertisment