ADVERTISEMENT

தமிழ் இருக்கைக்கு மக்கள் கொடுத்த பணம் எங்கே? -சர்ச்சை சுழலில் மந்திரி மாஃபா!

04:18 PM May 21, 2018 | karthikp

""உலகத் தமிழர்களின் உழைப்பில் விளைந்த பணத்தில், அமெரிக்காவிலுள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்காக திரட்டப்பட்ட நிதியை தமிழக அரசு எங்களுக்கு அனுப்பாமல்… வேறு ஏதோ திட்டம் தீட்டிவருகிறது''’ என்ற சர்ச்சைக் குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள் தமிழ் இருக்கைக்காக நிதி திரட்டும் ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைப்பினர். இதுகுறித்து, நாம் மேலும் விசாரித்தோம்...…

ADVERTISEMENT

ADVERTISEMENT

""ஹிந்தி, சமஸ்கிருதம் மட்டுமே இந்தியாவின் மொழிகள் என்பதுபோல உலகநாடுகள் மத்தியில் ஓர் பிம்பத்தை உருவாக்கிவந்த சூழலில், 2700 ஆண்டு கால இலக்கிய இலக்கண வரலாறு கொண்ட உலகின் மூத்த மொழி தமிழ் மொழி என்பதை உலகறியச் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில்தான் உலக புகழ்பெற்ற 380 வருட பழமையான ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கையை ஏற் படுத்த உலகம் முழுக்க உள்ள தமிழர்களிட மும் தமிழார்வலர் களிடமும் நிதி திரட்ட ஆரம்பித்தார்கள் தமிழ் இருக்கை (Harvard Tamil Chair Inc)அமைப்பினர். தமிழ் இருக்கை அமைக்க வேண்டுமென்றால் 6 மில்லியன் டாலர் -அதாவது இந்திய மதிப்பில் சுமார் 40 கோடியே 84 லட் சம் ரூபாய் செல வாகும். அதனால், ஆரம்பகட்டமாக ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைப்பி லுள்ள இயக்குநர் களும் அமெரிக்க வாழ் தமிழர்களு மான டாக்டர் விஜய் ஜானகிராமன், ஞானசம்பந்தம் ஆகியோர் இந் திய மதிப்பில் 10 லட்ச ரூபாய் தங்க ளது சொந்த நிதி யை ஒதுக்கி, அதன் பின்… உலகம் முழுக்க நிதி திரட்ட ஆரம்பித்தார்கள்.

டாக்டர் ஜானகி ராமன், டாக்டர் சுந்தரேசன் சம்பந்தம், பேராசிரியர் வைதேகி ஹெர்பர்ட், எழுத்தா ளர் அப்பாத்துரை முத்துலிங்கம், பால் பாண்டியன், சிவன் இளங்கோ, முனைவர் ஆறுமுகம் முரு கையா, முனைவர் இரகுராமன், குமார் குமரப்பன் ஆகியோர் கொண்ட அமைப் பானது www.harwardtamilchair.org என்ற இணையதளத்தை உருவாக்கி அதில் நேரடியாக நிதியளிக்கலாம் என்று அறிவித்தது ஹார் வர்டு தமிழ் இருக்கை அமைப்புக்கான நிதி திரட்டும் அமைப்பு. மேலும், சென்னை கோட்டூர்புரம் இந்தியன் வங்கி கிளையின் மூலம் 6579035703 என்ற வங்கிக் கணக்கிலும் அனுப்பினால் அதை ஹார்வர்டு தமிழ் இருக்கைக் குழுவுக்கு அனுப்பி விடுவோம் என்று தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்தது.

அ.தி.மு.க.வின் 2016 தேர்தல் அறிக்கையிலேயே ஹார்வர்டு பல்கலை தமிழ் இருக்கைக்கு உதவுவோம் என ஜெ. தெரிவித்திருந்ததால், அவர் மறைவுக்குப் பின், தமிழக அரசு 10 கோடி ரூபாய் நிதி அறிவித்தது. எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. சார்பில் 1 கோடி ரூபாயை ஹார்வர்டு அமைப்புக்கு அனுப்பினார். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் 2.6 கோடி அனுப்பியது. ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். பாலச்சந்திரன் 25 லட்சம் கொடுத்திருக்கிறார். கமல்ஹாசன் நேரடியாக நிதி கொடுத்துள்ளார். வைரமுத்து 5 லட்சம் கொடுத்தார். இப்படி, உலகம் முழுக்க உள்ள தமிழர்கள், தமிழார்வலர்கள், தமிழகத் தமிழர்கள் லட்சக்கணக்கில் நன்கொடையாக அனுப்பினார்கள். ஓய்வுபெற்ற தமிழாசிரியர் ஒருவர் தனது மொத்த ஓய்வூதியப் பலன்களையும் தமிழ் இருக்கைக்குத் தந்தார். எதிர்பார்த்த நிதியைவிட மிக அதிக மாகவே சேர்ந்திருக்கிறது. மே 5-ந் தேதி ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கான நிதி முழுமையாக வழங்கப்பட்டு, ஆரம்பக்கட்ட பணிகளும் தொடங்கிவிட்டன.

இதன்மூலம் ஒரு பேராசிரியர் 6 ஆராய்ச்சி மாணவர்களை நியமித்துக்கொள்ள முடியும். பேரா சிரியராக அம்ருத் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், இதோடு முடிந்துவிடப்போவதல்ல. இன்னும் நிறைய பேராசிரியர்களை நியமிக்கவேண்டும். ஆராய்ச்சி மாணவர்களை உருவாக்க வேண்டும். அலுவல் பணிகள் உள்ளன. அப்படியிருக்கும்போது, தமிழகத்திலிருந்து தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறைக்கு கோட்டூர்புரம் இந்தியன் வங்கியின் மூலம் பொதுமக்களும் தன்னார்வ அமைப்பினரும் அனுப்பிய நன்கொடை வந்து சேரவில்லை என்ற குற்றச்சாட்டு கிளம்பி, உலகத் தமிழர்கள் மத்தியில் பலத்த சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. யார், யார் எவ்வளவு நன்கொடை கொடுத்திருக்கிறார்கள்? தமிழ் இருக்கைக்கு ஒதுக்கப்பட்ட நிதிபோக… மீதமுள்ள நிதி எவ்வளவு? என்ற விவரத்தை தமிழக அரசு சொல்லவில்லை. "நாங்கள் அனுப்பிய நிதி வந்து சேர்ந்துவிட்டதா?' என்று பலரும் எங்களிடம் கேட்கிறார்கள். தமிழ்வளர்ச்சித்துறையிடம் செலுத்திய நிதிக்கான ரசீதுகூட கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் நன்கொடையாளர்கள் மத்தியில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.


இந்தச் சூழலில்தான் ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக வசூலிக்கப் பட்ட நிதியை எங்களுக்கு அனுப்பாமல் வேறு செலவுகளை செய்யப் போகிறார் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் என்கிற தகவல் எங்களுக்கு கிடைத்தது. ஒரு காரணத்தைச் சொல்லி நிதி வசூலித்து விட்டு, அதை வேறு காரணத்திற்காக செலவிடுவது அமெரிக்காவில் சட்டப்படி குற்றம். இப்படி, இந்த நிதி செலவிடப்பட்டால் நிதி வழங்கிய தமிழர்கள் எங்களிடம் கேள்வி கேட்பார்கள். இதனால், நிறைய சட்ட சிக்கல்கள் உள்ளன. துறை அமைச்சர் தனது வணிகத்தொடர்புகளுக்கு பயன்படுத்தி விடுவாரோ என்கிற சந்தேகமும் எங்களுக்கு ஏற்படுகிறது. அதனால், எதற்காக நிதி வசூலிக்கப்பட்டதோ அதற்கு செலவிடவேண்டும்''’என்று கோரிக்கை வைக்கிறார்கள் பெயர் வெளியிட விரும்பாத ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கை அமைப்பினர். இதுகுறித்து, தமிழ் இருக்கைக்காக நிதியளித்த "மக்கள் பாதை' அமைப்பின் நந்தகுமார் நம்மிடம், “""நம்ம தமிழ் மொழியைப்பற்றி உலகறியணும்னுதான் மக்கள் பாதை அமைப்பின் சார்பாக 5 லட்ச ரூபாய் நிதியை நன்கொடையாக அனுப்ப முடிவு செய்தோம். முதற்கட்டமாக, 2 லட்ச ரூபாயை ஹார்வர்டு நிதி திரட்டும் குழுவுக்கு நேரடியாக அனுப்பினேன். நிதி கிடைத்துவிட்டது என்று அதற்கான ஜர்னலிலும் எங்களது பெயரை குறிப்பிட்டு எழுதிவிட்டார்கள். ஆனால், மீதமுள்ள 3 லட்ச ரூபாயை தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்த கோட்டூர்புரம் இந்தியன் வங்கியின் மூலம் அனுப்பினேன்.

ஆனால், இதுவரை ஹார்வர்டு குழுவுக்கு அந்த 3 லட்ச ரூபாய் போய்ச் சேரவில்லை. அதற்கான, ரசீதையும் தமிழ் வளர்ச்சித்துறை எனக்கு அனுப்ப வில்லை. இதுகுறித்து, தமிழ் வளர்ச்சித் துறையில் நான் விளக்கம் கேட்டபோது... "வசூலான தொகை யில் முதற்கட்டமாக 20 லட்ச ரூபாய் அனுப்பிவிட் டோம். இரண்டாம் கட்டமாக அனுப்பப்படும் போது உங்களது தொகை ஹார்வர்டு இருக்கை அமைப்புக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும்' என்றவர்கள் "விரைவில் உங்களுக்கான ரசீது வரும்' என்றார்கள்; அதற்காகக் காத்திருக்கிறேன்''’என்றார்.

ஹார்வர்டு பல்கலைக்கழக இருக்கை அமைப்புக்குழுவின் குற்றச்சாட்டுகள் குறித்து தமிழ் வளர்ச் சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜ னிடம் நாம் கேட்ட போது, “""ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க நாம் எதிர் பார்த்ததைவிட கூடுத லாகவே நிதி சேர்ந்துள் ளது. தற்போது, 6 மில் லியன் டாலர் நிதியை கொடுத்து தமிழ் இருக்கையும் அமைக்கப்பட்டுவிட் டது. தமிழ்வளர்ச்சித்துறையின் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் சேகரித்த 3 கோடி ரூபாயில் 32 லட்சம் அனுப்பிவிட்டோம். அதுவே, அவர் களுக்கு போதுமானது. மீதமுள்ள, தொகை நம்மி டம் உள்ளது. அதனால், தமிழ் வளர்ச்சித்துறைக்கு கீழுள்ள தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், இசை மற்றும் கவின் பல்கலைக் கழகம் ஆகியவற்றை தரம் உயர்த்துவதற்காக மீதமுள்ள நிதியை பயன்படுத்த ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைப்பு குழுவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட இருக்கிறோம். அதிலுள்ள, 8 இயக்குநர்கள் கையெழுத்திட இருக்கிறார்கள்''’என்றார்.



‘ "ஒரு காரணத்துக்காக வசூலிக்கப்பட்ட நிதி அந்தக் காரணத்திற்காகத்தானே செலவு செய்யப்பட வேண்டும்? தமிழ் இருக்கை அமைத்துவிட்டால் போதுமா? அங்கு இன்னும் பல பேராசிரியர்களை யும் ஆராய்ச்சி மாணவர்களையும் நியமிக்கவும் அலுவல் பணிகளுக்காகவும் நிதி தேவைப்படுமே? அதனால், அதற்காக சேகரித்த தொகையை தமிழக அரசு ஏன் இன்னும் அனுப்பி வைக்கவில்லை?’என்று தமிழார்வலர்கள் கேட்கிறார்களே' என நாம் அமைச்சரிடம் கேட்டபோது... ""6 மில்லியன் டாலர் களை வைத்து அந்த இருக்கையை அமைக்கும் போது அதற்குமேல் அந்தத் தொகையை அவர்களி டம் கொடுப்பதில் அர்த்தமில்லை. நமது மாநிலத் திலுள்ள தமிழ்ப் பல்கலைக்கழகமும் இசைப் பல் கலைக்கழகமும் முத்தமிழுக்கான பல்கலைக்கழகங் கள்தான். இந்த நிதியை ஒதுக்கி ஆய்வுத் தரத்தை உயர்த்துவதால் இந்தியத் தரத்திற்கு இந்த இரண்டு பல்கலைக்கழகங்களும் வந்துவிடும்.

மேலும், டிபார்ட்மெண்டல் சவுத் ஏஷியன் ஸ்டடிஸ் தலைவர் டாக்டர் அம்ருத்துடனும் (சிங்கப் பூர் தமிழர்) எனக்கு நேரடி தொடர்பு உள் ளது. அவரிடமும் பேசி வருகிறேன். அவர்கள், கூடி பேசி முடிவெடுப் பார்கள். மற்றபடி, எனது வியாபார தொடர்புக்கு பயன்படுத்தப்போகிறேன் என்பது தவறான குற்றச் சாட்டு. ஜனவரி மாதம் தான் இதற்கான பணி களை தொடங்கினோம். அதனால், சில நடை முறைச் சிக்கல்களால் தாமதமாகிறது. விரைவில் நன்கொடை அனுப்பிய வர்களுக்கான ரசீது அனுப்பி வைக்கப்படும்''’ என்கிறார் விளக்கமாக.


இதுகுறித்து, நம்மிடம் பேசும் மூத்த அறிஞர் களோ, ""பரிதிமாற் கலைஞரில் தொடங்கி 150 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு தமிழ் மொழிக்கு செம் மொழித் தகுதியை ஐ.மு.கூ. ஆட்சியில் பெற்றுத்தந்தது தி.மு.க. இதன்மூலம், உருவான செம்மொழி தமிழாய்வு மையத்தை அ.தி.மு.க. ஆட்சி காழ்ப் புணர்வில் அழிக்காமல் செம்மைப்படுத்தியிருந்தாலே உலகம் முழுக்க தமிழ்மொழியை கொண்டு செல்லும் பணியை அந்த மையம் செய்துகொண்டி ருக்கும். அரசியல் கார ணங்களுக்காக அதையும் சீரழித்துவிட்டு… தற்போது, ஹார்வர்டு பல்கலைக் கழகத்துக்காக திரட்டிய நிதியையும் தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகத்துக் காக செலவிட வேண்டும் என கெஞ்ச வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்காது''’’ என்கிறார்கள்.

மீதமுள்ள தொகை எங்கே? அது எப்போது ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்குப் போகும் என கேட்கிறார்கள் உழைத்த காசில் நிதி வழங்கிய தமிழர்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT