pandiyarajan

Advertisment

பிரதமர் மோடி இன்று குஜராத்திலுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை திறக்க உள்ளார். இந்த 143வது சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று திறக்கப்படுகிறது. சுமார் ரூ. 2900 கோடி செலவில் உலகின் உயர்ந்த சிலையான இந்த சிலை கட்டப்பட்டுள்ளது. குஜராத்திலுள்ள நர்மதா அணைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள இந்த சிலை திறப்பு விழாவை முன்னிட்டு இந்தியாவிலுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசியல் தலைவர்கள் வந்துள்ளனர்.

உலகிலேயே உயர்ந்த சர்தாரின் சிலையை திறந்து வைத்தார். மேலும் இந்த ஸ்டேச்சு ஆஃப் யூனிட்டி சிலை திறப்பு விழாவில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி, துணை முதல்வர் நிதின் பட்டேல், ம.பியின் ஆளுநர் அனந்திபென் பட்டேல் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.