ADVERTISEMENT

ஏசிஎஸ்க்கு விழுந்த ஓட்டுக்கு உரிமைகோரும் அதிமுக... களம் சொல்லும் கணக்கு என்ன..?

06:00 PM Aug 09, 2019 | suthakar@nakkh…

தள்ளி வைக்கப்பட்டிருந்த வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் கடந்த 5ம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்குப்பதிவு இன்று காலையில் தொடங்கியது. தொடக்கம் முதலே அதிமுக ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், 11 மணிக்கு மேல் வெற்றி திமுகவின் பக்கம் நகர்ந்தது. அது கடைசி ரவுண்ட் வரை தொடர்ந்தது. வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் சுமார் 8,141 வாக்குகள் அதிகம் பெற்று திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஏசிஎஸ் 4,77,199 வாக்குகளும் பெற்றார். தேர்தல் முடிவுக்கு பிறகு பேட்டியளித்த அமைச்சர் ஜெயகுமார் கேவலம் 8 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றிபெற்றுள்ளது. இது திமுகவுக்கு அவமானமான ஒன்று, இது எங்கள் எதிர்காலத்துக்கான வெற்றி என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக இணையதளங்களில் ஒரு தேர்தல் கணக்கு சுற்றிவருகிறது. அதில் "கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் நின்ற ஏசிஎஸ் 3,24,324 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றார். அதிமுக 3,83,719 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. திமுக கூட்டணியில் நின்ற முஸ்லிம் லீக் வேட்பாளர் 2,05,896 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். வெறும் 8 ஆயிரம் வாக்குகள் மட்டுமே திமுக அதிகம் பெற்றுள்ளது என்று கிண்டல் செய்யும் அமைச்சர் பெருமக்களுக்கு, கடந்த தேர்தலை விட திமுக 2,80,000 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது என்பதை ஏன் மறந்தார்கள் என்று தெரியவில்லை. அதையும் தாண்டி கடந்த தேர்தலில் ஏசிஎஸ் அந்த தொகுதியில் போட்டியிட்ட போது அவர் வாங்கி வாக்குகள் வாக்குகள் 3,24,324. அப்போது அதிமுகவை தவிர ஏறக்குறைய இதே கூட்டணியில்தான் அவர் தேர்தலை சந்தித்தார்.

ADVERTISEMENT




பாஜக, தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் அந்த கூட்டணியில் இருந்தது, அதிமுக மட்டும் தனியாக தேர்தலை சந்தித்தது. இப்போது அவர் வாங்கியுள்ள ஓட்டுக்கள் 4,77,199. கடந்த தேர்தலில் அவர் வாங்கிய வாக்குகளை விட 1,52,875 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். அதிமுக 2014ல் வாங்கிய 3,84,719 வாக்குகளில் ஏன் பாதி கூட இப்போது ஏசிஎஸ்க்கு விழ வில்லை என்று திமுகவை சேர்ந்தவர்கள் கேட்டால் அமைச்சர் ஜெயக்குமார் என்ன சொல்லுவார். இந்த வாக்குகளை கூர்ந்து கவனித்தால் ஏசிஎஸ்சின் தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக விழுந்த வாக்குகள்தான் அவை என்பது அரசியல் தெரிந்த யாருக்கும் புரியம். எனவே இந்த வாக்குகளுக்கு அதிமுக சொந்த கொண்டாடினாலும் பரவாயில்லை, ஆனால் வெற்றிபெற்றவரை தோல்வி அடைந்தவர் போல நையாண்டி செய்வதைதான் பார்க்க சகிக்க முடியவில்லை. தோல்விக்கான காரணத்தை கூட ஒழுங்காகக் கூற கற்றுக்கொள்ளுங்கள் அமைச்சர் பெருமக்களே" என்று அமைச்சர் ஜெயகுமாரை நையாண்டி செய்துள்ளனர் நெட்டிசன்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT