Skip to main content

வேலூரில் எதுவும் நடக்காது என முதல்வரிடம் அதிருப்தி காட்டிய அமைச்சர்! 

Published on 25/07/2019 | Edited on 25/07/2019

இரட்டை இலையில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், உதயசூரியனில் களமிறங்கும் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் இருவருக்கிடையிலான பலத்த போட்டிக்கிடையே நாம் தமிழர் கட்சியின் பெண் வேட்பாளர்... வேலூர் மக்களவைத் தேர்தல் களத்தில் நிற்கிறார். டி.ஆர்.பாலு தலைமையில் சட்டமன்றத் தொகுதிவாரியாக தேர்தல் பொறுப்பாளர்களை தி.மு.க. அறிவித்தது. அ.தி.மு.க.வில் அறிவிப்பு தாமதமாகி வந்த நிலையில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மா.செ.க்கள், அமைப்புச் செயலாளர்கள் என 200 தேர்தல் பொறுப் பாளர்கள் கொண்ட பிரமாண்ட அணி அறிவிக்கப் பட்டுள்ளது.
 

dmk



ஏ.சி.சண்முகம் தனது பென்ஸ் பார்க் ஹோட்டலில் தங்கி தேர்தல் வேலை பார்த்துவருகிறார். தினமும் நிர் வாகிகள் சந்திப்பு, வியூகம், டீலிங் எல்லாமே இங்கிருந்து தான். ஆனாலும், வேலூர் தேர்தல் நிறுத்தப்படுவதற்கு முன்பிருந்த வேகம் இப்போது இல்லை. விசாரித்தபோது, அ.தி.மு.க.வில் ஒன்றிய, நகர நிர்வாகிகளை வேலை வாங்குவதில் சுணக்கம் காட்டப்படுகிறது. மாவட்ட, மாநில நிர்வாகிகள் பலர் தி.மு.க. பொருளாளர் துரைமுருக னின் பாசப் பார்வையில் சிக்கிவிட்டார்கள். இதுபற்றி ஏ.சி.சண்முகம், முதல்வரிடம் நேரடியாகவே பேசினார். டெல்லியில் இருந்தும் ஏ.சி.சண்முகத்துக்காகப் பேசப்பட் டுள்ளது'' என்கிறார்கள். இதனை மறுக்கும் அ.தி.மு.க. நிர்வாகிகளோ, ""உண்மையான கட்சிக்காரன் துரை முருகன் பக்கம் போகமாட்டான். ஏ.சி.எஸ். எங்க அ.தி. மு.க.வில் இருக்கிற அவர் சாதி நிர்வாகிகளுக்கு முன் னுரிமை தருகிறார். வன்னியர், நாயுடு, முஸ்லிம் நிர்வாகிகளிடம் அந்த ஈடுபாட்டைக் காட்டவில்லை. ஏற்கனவே, பா.ஜ.க. வுடன் கூட்டணியில் இருப்பதால் தொகுதியில் உள்ள முஸ்லிம் வாக் காளர்களை சந்திப்பது கஷ்டமாக இருக்கிறது. இதில் சாதிக் கண்ணோட்டமும் இருந்தால் என்ன செய்வது? தேர்தல்களம்னா அப்படி இப்படித்தான் செலவாகும். அதற்கு வவுச்சரில் கையெழுத்து வாங்கினால் நிர்வாகிகள் எப்படி உற்சாகமாக வேலை பார்ப்பார்கள்? என்கின்றனர்.


  admk



"அமைச்சர் வீரமணி வன்னியர் சமுதாயத்தவர் என்பதால், துரை முருகன் மகனுக்கு மறைமுக ஆதரவு' என முதல்வர் எடப்பாடி வரை புகார் செய்திருக்கிறது ஏ.சி.எஸ். தரப்பு. வீரமணியோ, "நான் வேலை பார்க்காவிட்டால் வேலூரில் எதுவும் நடக்காது' என முதல்வரிடம் சொன்ன துடன், தன் அதிருப்தியை ஏ.சி.எஸ். வேட்புமனுவின் போதும் வெளிப் படுத்தினார். அருகில் இருந்தும் வேட்புமனு படிவத்தைத் தொடவில்லை. ""வன்னியர்கள் அதிகமுள்ள அணைக்கட்டு தொகுதி அ.தி.மு.க. பிரமுகர், இரட்டை இலை வேட்பா ளர் சாதிக் கண்ணோட்டத்தில் செயல்பட்டால், எங்க சாதி ஆட்கள் உதயசூரியன் வேட்பாளர் பக்கம் தான் போவாங்க. நான் ஓட்டுக் கேட்கப் போனால், சிரிப்பாங்க. அதனால், நான் கட்சி நிர்வாகியா சொல்ற வேலையை மட்டும் செய்யுறேன்'' எனப் பட்டும் படாமலும் சொல்லி விட்டாராம். அ.தி.மு.க.வில் உள்ள வன்னிய பிரமுகர்களின் அதிருப்தியை உணர்ந்த ஏ.சி.சண்முகம், கூட்டணிக் கட்சியான பா.ம.க. எம்.பி. அன்பு மணி ராமதாசை சந்தித்து பேசிய பின், பா.ம.க. தலைமையும் வேலூர் மாவட்ட நிர்வாகிகளிடம், ஏ.சி.எஸ்.ஸுக்காக தீவிரமாக களப்பணியாற்றச் சொன்னது. முன்னாள் அமைச்சர் என்.டி.சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ. இளவழகன் போன்றவர்கள் ஏ.சி.எஸ்.ஸுடன் வலம் வருகின்றனர். "இரண்டு வேட்பாளர்களில் யார் வன்னியரோ அவரைத்தான் ஆதரிக்கணும்னு நீங்கதானே சொன்னீங்க' என சமுதாய வாக்காளர்களின் கேள்வி சங்கடத்தை ஏற்படுத்துகிறது.


தி.மு.க.வில் தேர்தல் பணிகள் சுறுசுறுப்பாகத் தெரிந்தாலும், ஆளுந்தரப்பின் அதிகாரபலத்தால் முடக்கும் வேலை நடக்கும் என்பதால் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு வழக்கறிஞர் அணியை அறிவித்துள்ளது தி.மு.க. தலைமை. காங்கிரஸ், வி.சி.க. பிரமுகர்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்ற புலம்பல் கேட் கிறது. காங்கிரஸ் பிரமுகரான முன்னாள் எம்.எல்.ஏ. வாலாஜா அசேன் சுயேட்சையாக களத்தில் இறங்கியுள்ளார். ""எங்களிடம் சரியான அணுகுமுறையை தி.மு.க. கடைப்பிடிக்காததால்தான் எதிர்த்து போட்டியிடுகிறேன்'' என்றார் அசேன் நம்மிடம். "தி.மு.க.வுக்கு சாதக மாகவுள்ள இஸ்லாமிய வாக்குகளைப் பிரிக்க அசேனை தூண்டிவிட்டுள்ளார் கள்' என்ற பேச்சு உள்ளது. தி.மு.க.வில் உள்ள முதலியார் சமுதாயத்து நிர்வாகி கள், ஏ.சி.எஸ். ஆதரவு நிலை எடுப்பதை அறிந்த துரைமுருகன், அவர்களை சமாதானம் செய்து, அவர்களிடமே சில தேர்தல் வேலைகளையும் தந்து திணறடித்துள்ளார் என்கிறார்கள். நீண்ட காலமாக மாவட்டத்தில் உள்ள உள்கட்சி எதிரிகளை சமாளிக்கும் வேலையும் நடக்கிறது.
 

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.