ADVERTISEMENT

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு... தமிழ்நாடு வெதர்மேன்

04:30 PM Nov 20, 2018 | kamalkumar

ADVERTISEMENT

தமிழ்நாடு மற்றும் சென்னைக்கு வரவிருக்கும் அடுத்த மழை குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT


வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு மற்றும் வடமேற்காக நகர்ந்து, கடலூர் பகுதியை நோக்கி வரும் 21-ம் தேதி செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை பொறுத்தவரை பலமாக காற்று வீசாது, நாளை நிலப்பகுதி அருகே வரும்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பிருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புகள் குறைவுதான். ஆனால் அதற்கான சாதகமான சூழல்கள் இருக்கின்றன. ஒருவேளை அது வலுவிழந்த புயலாகவும் மாறலாம். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு நோக்கி செல்லும். இதன் காரணமாக கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக அதிக கனமழையும், தஞ்சை, நாகை, அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், சென்னை, திருவண்ணாமலை, அதை ஒட்டிய மாவட்டங்களில் கன மழையும் பெய்யக்கூடும். புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை புதுச்சேரியில் மிக, மிக கனமழையும், காரைக்காலில் கனமழையும் பெய்யும்.


வடதமிழகத்தில் தீவிரமான மழை பொழிவு இருக்கும். இதனால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடவும் வாய்ப்பிருக்கிறது. சென்னையில் இன்று முதல் மழை பெய்யும். மிதமான மழையாக தொடங்கும் இது 22-ம் தேதி வரை நீடிக்கும். 23-ம் தேதியில் இருந்து மழை படிப்படியாகக் குறையும். சென்னையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் 850மிமீ மழை சராசரியாகப் பெய்யும், ஆனால், தற்போதுவரை 225 மிமீ மழை பதிவாகியுள்ளது. அடுத்த 3 நாட்கள் சென்னைக்கு மிக முக்கியமானது. இந்த மழையை சென்னை தவறவிடாது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில்கூட ஒருநாள் மழை இருக்கும். நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் வீசப்படும் காற்றை கஜா புயலோடு ஒப்பிட முடியாது. இது கடற்கரைப் பகுதியை கடக்க ஒரு நாள் ஆகும். இது நிலப்பகுதியை அடையும் போது வலுவடையவும் வாய்ப்புள்ளது. தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்பது உறுதியாகியுள்ளது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறலாம். இதனால், 50 முதல் 60 கி.மீ வரை வடதமிழக மாவட்டங்கள், கடலூர், புதுச்சேரியில் காற்றுவீசக்கூடும்.

தமிழகத்துக்கு வடகிழக்குப்பருவமழையின் மூலம் இதுவரை 305மிமீ மழை பதிவாகி இருக்க வேண்டும், ஆனால், இதுவரை 243 மிமீ மழை மட்டுமே கிடைத்திருக்கிறது. அடுத்த 3 நாட்கள் வடதமிழகத்தில் மழை இன்னும் தீவிரமாகி, எதிர்பார்த்த மழை பொழிவு கிடைக்கும். டிசம்பர் மாதம் மீண்டும் மழைபருவகாலம் நம்முடைய கடற்பகுதிக்கு வருகிறது. இதனால், தமிழகத்துக்கு கூடுதலாக மழை கிடைக்க வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT