ADVERTISEMENT

இரண்டு ஆண்டுகளில் உதயமான ஆறு மாவட்டங்கள்... தமிழ்நாடு மாவட்டங்களின் வரலாறு!

11:33 AM Dec 28, 2020 | santhoshkumar

ADVERTISEMENT

ADVERTISEMENT

நம்முடைய சொந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை அலுவலகத்தில் சந்திக்கும்போதோ அல்லது வேறு எங்காவது எதர்ச்சையாக சந்திக்கும்போதோ நம்மையே அறியாத ஒரு நல்ல உணர்வு கிடைக்கும். குறிப்பாக ஊரைவிட்டு வெளியூரில் அல்லது வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு அந்த தருணம் அவர்களின் சொந்த ஊருக்கே அழைத்து சென்றுவிடும். சுதந்திரத்திற்கு பின்னான அப்போதைய தமிழகம் முதலில் 13 மாவட்டங்களை கொண்ட மாநிலமாக இருந்தது. அதன்பின் மக்களின் தேவை, காலத்தின் கட்டாயத்தை உணர்ந்து புதுப் புது மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. மதராஸ் மாகாணம் எப்படி மதராஸ் மாநிலமாக மாறி 1969ஆம் ஆண்டில் தமிழ்நாடு என மாறியதற்கு காரணம் இருந்ததைப்போல, மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதற்கு காரணம் இருந்ததைப்போல மாவட்டங்கள் பிரிப்பதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது, மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றுதும் நிர்வாகம் செய்வதும் எளிதாகும். அந்த வகையில் தற்போது நாகப்பட்டினத்திலிருந்து மயிலாடுதுறை 38வது மாவட்டமாக உதயமாவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதமே மயிலாடுதுறையை மாவட்டமாக பிரிக்க இருப்பதாகவும், அதற்காக இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளையும் நியமித்திருந்த நிலையில் நேற்றிலிருந்து அதிகாரப்பூர்வமாக மாவட்டமானது மயிலாடுதுறை.

ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை அடைத்தபோது மதராஸ் மாநிலத்திலிருந்த மாவட்டங்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 13 மாவட்டங்கள்தான். மெட்ராஸ், செங்கல்பட்டு, நார்த் ஆர்காடு, சவுத் ஆர்காடு, சேலம், கோயம்புத்தூர், நீலகிரி, மதுரை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, கன்னியாகுமாரி உள்ளிட்ட மாநிலங்கள்தான் அவை. இதனைதொடர்ந்துதான் 13 மாவட்டங்களாக இருந்தது, ஒவ்வொரு காலகட்டத்திலும் பிரிக்கப்பட்டு தற்போது 38 மாவட்டங்களாக மாறியிருக்கிறது.

இந்த 13 மாவட்டங்களை அடுத்து முதன் முதலாக பிரிந்த மாவட்டம் என்றால் சேலம் மாவட்டம்தான். 1966ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்திலிருந்து சேலம் மாவட்டம் தனியாக பிரிந்தது.

தற்போது திருச்சியிலிருந்து மூன்று மாவட்டங்கள் பிரிந்துள்ளது. இதில் முதன் முதலாக பிரிந்த மாவட்டம் புதுக்கோட்டை. இது 1974 தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது.

1979ஆம் ஆண்டு கோயம்பத்தூரிலிருந்து பிரிக்கப்பட்டது ஈரோடு.

1985ஆம் ஆண்டு மதுரை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களிலிருந்து விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது. இதே ஆண்டில் மதுரையிலிருந்து திண்டுக்கல் பிரிக்கப்பட்டுள்ளது.

1986ஆம் ஆண்டில் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி பிரிக்கப்பட்டது.

1989ஆம் ஆண்டில் வட ஆற்காடு மாவட்டத்திலிருந்து திருவண்ணாமலை, வெல்லூர் என்று இரு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது.

1991ஆம் ஆண்டில் தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து நாகப்பட்டினம் பிரிக்கப்பட்டது. பின்னர் 1996ஆம் ஆண்டில் நாகப்பட்டினத்திலிருந்து திருவாரூர் மாவட்டம் பிரிக்கப்பட்டது.

1993ஆம் ஆண்டில்தான் தென் ஆற்காடு மாவட்டத்திலிருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் என்று இரண்டு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது.

1995ஆம் ஆண்டில் திருச்சியிலிருந்து கரூர் மற்றும் பெரம்பலூர் என மேலும் இரண்டு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது.

1996ஆம் ஆண்டில் மதுரையிலிருந்து தேனி பிரிக்கப்பட்டது.

1997ல் சேலத்திலிருந்து நாமக்கல் பிரிக்கப்பட்டது.

2004ல் தர்மபுரியிலிருந்து கிருஷ்ணகிரி பிரிக்கப்பட்டது.

2007ல் பெரம்பலூரிலிருந்து அரியலூர் பிரிக்கப்பட்டது.

2009ல் கோயம்புத்தூர் மற்றும் ஈரோட்டிலிருந்து திருப்பூர் என்ற மாவட்டம் உருவாக்கப்பட்டது.

2019ஆம் ஆண்டு தொடக்கத்தில் விழுப்புரத்திலிருந்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. ஆண்டின் இறுதியில் மேலும் நான்கு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது. திருநெல்வேலியிலிருந்து தென்காசி, காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டு, வேலூரிலிருந்து ராணிப்பேட்டை மற்றும் திருபத்தூர் என இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது.

நேற்று தமிழ்நாட்டின் 38வது மாவட்டமாக நாகப்பட்டினத்திலிருந்து மயிலாடுதுறை தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது. இது மயிலாடுதுறை மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கையாகும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT