/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/998_93.jpg)
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்துள்ள புதுத்துறை பகுதியைச் சேர்ந்தவர் பூவிழியன் (21). இவர், ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள டையிங் நிறுவனம் ஒன்றில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 11ம் தேதி பூவிழியன் வேலைக்கு வரவில்லை, நிறுவனத்தின் தங்கும் விடுதியிலும் இல்லை என அவரது தாயார் சித்ராவுக்கு (50) டையிங் நிறுவனத்தில் இருந்து போன் மூலமாக தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பெருந்துறை போலீசில் பூவிழியனை காணவில்லை எனக் கூறி புகார் தெரிவித்து தேடி வந்தனர்.
இந்த நிலையில், நேற்று காலை 8 மணியளவில் பெருந்துறை, சேனிடோரியம் அருகில் உள்ள இணைப்புச் சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தின் பின்புறம் உள்ள வேப்ப மரத்தில், பூவிழியன் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், பூவிழியனின் இறப்புக்கான காரணம் குறித்து வழங்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)