Earthquake in Sirkazhi ... This is the reason ...

Advertisment

இன்று (27.03.2021) காலை சீர்காழியில் பயங்கர வெடி சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நில அதிர்வுக்கான விளக்கத்தை மயிலாடுதுறை வட்டாட்சியர்கொடுத்துள்ளார்.

மயிலாடுதுறையில்சீர்காழி, தரங்கம்பாடி, பூம்புகார் கொள்ளிடம் ஆகிய இடங்களில்நில அதிர்வு ஏற்பட்டதாகவும், பயந்த வெடி சத்தத்துடன் நில அதிர்வானது காரைக்காலிலும் உணரப்பட்டதாகவும்மக்கள் தெரிவித்தனர். விமானம் போன்ற ஒன்று தாழ்வாக பறந்து சென்ற நிலையில், அதற்குப் பின் நில அதிர்வை உணர்ந்ததாக வெளியான தகவல் அங்கு பரபரப்பைக் கூட்டியது. இந்நிலையில், கோவாங்குடியில்நேரில் ஆய்வு செய்த மயிலாடுதுறைவட்டாட்சியர் பிரான்சுவா இதுகுறித்து கூறுகையில், ''ராணுவ விமானத்தில் ஏர் லாக் விடுவிக்கும்போதுசத்தம் ஏற்படுவது வழக்கம்தான். அதனால்தான் சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டது. எனவே மக்கள் தேவையின்றி அச்சப்பட வேண்டாம்'' என்றார்.