ADVERTISEMENT

இலையா? சூரியனா? தென் மாவட்ட நிலவரம்! உளவுத்துறை EXCLUSIVE சர்வே! 

09:48 AM Apr 01, 2021 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

"உங்கள் மாவட்டத்திலுள்ள சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களின் வெற்றிவாய்ப்பு எவ்வாறு உள்ளது..?” என்பது குறித்த சர்வேயினை எடுத்து பிரத்யேக மின்னஞ்சலுக்கு விரைவாக அனுப்பிடல் வேண்டும் என எக்செல் ஷீட்டோடு அசைன்மெண்ட் கொடுத்தது உளவுத்துறை.

"இந்த சர்வேயில் அ.தி.மு.க. வேட்பாளர் பெயர், அவருடைய செல்வாக்கு, அவருக்கு இருக்கும் உட்கட்சி பிரச்சினைகளை மட்டுமே கேட்டிருந்தது. தி.மு.க. கூட்டணியின் வேட்பாளரைக் கூட அது கேட்கவில்லை. அதேவேளையில் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அ.ம.மு.க. கூட்டணியினர் உள்ளிட்ட கட்சிகள் வாங்கவிருக்க வாக்குக்களைத் துல்லியமாக குறிக்கக் கூறியிருந்ததும் அடுத்தக்கட்ட திட்டத்திற்கான முன் தயாரிப்பு என்றுதான் நாங்கள் நினைக்கிறோம்'’ என்ற உளவுத்துறை தரப்பினர், கிடைத்த ரிசல்ட் குறித்து மெதுவாக பகிர்ந்துகொண்டனர்.

"10 தென் மாவட்டங்களில் மொத்தமுள்ள 58 தொகுதிகளில், தி.மு.க. கூட்டணிக்கு 14 தொகுதிகளும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 14 தொகுதிகளும் இழுபறியாக 30 தொகுதிகளும் உள்ளன எனவும் குறிப்பிட்டிருந்தோம்” என புன்னகைத்தனர். கடந்தமுறை இந்த 58 தொகுதிகளில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் சமமாக 29 தொகுதிகள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அ.ம.மு.க.வால் பாதிப்பு ஏற்படும் தொகுதிகள், ம.நீ.ம, நாம் தமிழர், புதிய தமிழகம் ஆகியவை தொகுதிவாரியாக வாங்கக்கூடிய ஓட்டுகள் ஆகியவையும் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன.

தி.மு.க. கூட்டணியில் ஆண்டிப்பட்டி, கம்பம், ஆத்தூர், மதுரை மத்தி, பத்மநாபபுரம், விளவங்கோடு, திருப்பத்தூர், முதுகுளத்தூர், தூத்துக்குடி, திருச்செந்தூர், தென்காசி, பாளையங்கோட்டை, விருதுநகர் மற்றும் திருச்சுழி ஆகியனவும்; அ.தி.மு.க. கூட்டணியில் நெல்லை, அம்பாசமுத்திரம், ஆலங்குளம், ஸ்ரீவைகுண்டம், நாகர்கோவில், நத்தம், நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், உசிலம்பட்டி, திருப்பரங்குன்றம், திருமங்கலம், மதுரை தெற்கு மற்றும் போடி ஆகியனவும் அந்தந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளாக உளவுத்துறை சர்வேயில் உறுதி செய்யப்பட்ட நிலையில்... பெரியகுளம், திண்டுக்கல், வேடச்சந்தூர், மதுரை மேற்கு, மதுரை வடக்கு, மதுரை கிழக்கு, சோழவந்தான், மேலூர், கிள்ளியூர், கன்னியாகுமரி, குளச்சல், காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, ராமநாதபுரம், திருவாடனை, பரமக்குடி, ஒட்டப்பிடாரம், விளாத்திக்குளம், கோவில்பட்டி, சங்கரன்கோவில், கடையநல்லூர், வாசுதேவநல்லூர், ராதாபுரம், நாங்குநேரி, அருப்புக்கோட்டை, ராஜபாளையம், சாத்தூர், சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆகியன இழுபறி பட்டியலில் அடங்கும்.

"முதல்வரின் கவனத்திற்குச் செல்லும் உளவு ரிப்போர்ட்டில் இழுபறி என்று சொன்னால், அதன் முடிவு எப்படி இருக்கும் என்பது ஆட்சியாளர்களுக்குத் தெரியும்' என்கிறார்கள் காவல்துறையினர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT