ADVERTISEMENT

நீட் தேர்வை ஆதரிப்பவர்களோடு கூட்டணி வைத்துக்கொண்டு தேர்வை எப்படி ரத்து செய்வீர்கள்..? -சீமான் கேள்வி!

03:10 PM Sep 18, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் நடப்பு அரசியல் சூழல் தொடர்பாக பல்வேறு கருத்துகளை பேசினார். அவை வருமாறு, " இன்றைக்கு ஜல்லிக்கட்டு போட்டிக்கு விலக்கு வாங்கியது போல நீட் தேர்வுக்கு விலக்கு வாங்கப்படும் என்று கூறுகிறவர்கள், அதை எப்படி யாரிடம் கூறி வாங்குவார்கள் என்பதை வெளிப்படையாக கூற வேண்டும். சும்மா எதையும் கூறக்கூடாது என்பது என்னுடைய கருத்து. நேரடியாக மோடியிடம் பேசும் அளவுக்கு செல்வாக்கு பெற்றுள்ள ஸ்டாலின் இதை தடுக்க முயற்சிக்கலாம். ஆனால் அவர் யாரிடம் என்ன சொல்லி இதனை தடுத்த முடியும். இவர்களிடம் தான் 39 எம்பிக்கள் இருக்கிறார்கள். மேலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த தேர்வை ரத்து செய்வோம் என்று கூறுகிறார்கள். இவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் மத்தியில் பாஜக ஆட்சிதானே நடைபெறும். பிறகு இவர்கள் எப்படி தேர்வை நிறுத்துவார்கள். இதை முதலில் அவர்கள் தெளிவாக விளக்க வேண்டும்.

ADVERTISEMENT

நீட் தேர்வு கண்டிப்பாக நடைபெறும், மாணவர்கள் தேர்வுக்கு தயாராக இருக்க வேண்டும் என்று அம்மையார் நளினி சிதம்பரம் தெரிவிக்கிறார். கார்த்தி சிதம்பரம் அதனை வரவேற்கிறேன் என்று தெரிவிக்கிறார். அவர்களோடு கூட்டணி வைத்துக்கொண்டு யாரிடம் சொல்லி நீட் தேர்வை ஒழிப்போம் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். ஆக தற்போது மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் உள்ள கொதிநிலையை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள பார்க்கிறார்கள் என்பதே எங்களின் குற்றச்சாட்டு. அவர்களுக்கு இதை பற்றி பேசுவதற்கான தகுதி, நேர்மை இது எதுவுமே கிடையாது. தமிழ்நாட்டில் இந்தி திணிப்பதை தான் நாங்கள் எதிர்க்கிறோம் என்று திமுக கூறுகின்றது. எந்த இடத்தில் தமிழகத்தில் இந்தி இல்லை என்று முதலில் சொல்ல வேண்டும். சங்கம் வளர்த்த மதுரையில் கூட இரயில் நிலையங்களில் ஒரு தமிழ் எழுத்தை காணவில்லை. இதுதான் இன்றைய தமிழகத்தின் அவல நிலையாக உள்ளது.

தமிழ்நாட்டில் பாதைகளில் உள்ள மைல் கற்களில் தமிழ் இருக்கிறதா என்றால் அறவே இல்லை என்று சொல்லும் அளவிற்குத்தான் இன்றைய நிலைமை இருக்கிறது. ஆங்கிலம் மற்றும் தமிழ்தான் மைல்கற்களை ஆக்கிரமித்துள்ளது. மாநில தன்னாட்சியை மறுப்பவர்களுடன் இவர்கள் கூட்டணி வைத்ததே தமிழகம் இந்த நிலைக்கு ஆளானதற்கு காரணம். இதனால்தான் மாநில உரிமைகள் அனைத்தும் நம்மை விட்டு பறிபோயுள்ளது. இந்தி தன்னாலே உள்ளே வந்துவிட்டது. இவர்கள் இந்தியை தடுப்போம் என்று சொல்வதை ஒரு வேடிக்கையாகத்தான் பார்க்க வேண்டும். மேலும் மாணவர்கள் பள்ளி இறுதி தேர்வில் 1999 மதிப்பெண் வாங்கினாலும், நீட் தேர்வில் வெற்றிபெற்றால்தான் மருத்துவர் ஆக முடியும் என்ற நிலையை உருவாக்கி வைத்துள்ளீர்கள். 600 மதிப்பெண் எடுத்தவர் நீட் தேர்வில் வெற்றி பெற்றால் அவர் மருத்துவம் படிக்கலாம் என்பதெல்லாம் எந்த மாதிரியான தகுதி என்று தெரியவில்லை. எனவேதான் நீட் தேர்வை தூக்கி எறிய சொல்கிறோம். எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT