ADVERTISEMENT

'நான் சங்கியா..?" கோபத்தில் காலணியை கழட்டிய சீமான்!

02:37 PM Dec 16, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சுக்கள் எப்போதும் தடாலடி கருத்துகளைக் கொண்டதாகவே இதுவரை இருந்திருக்கிறது. அதை மீண்டும் உறுதி செய்யும் வகையில் தற்போது சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் அவர் பேசியிருப்பது அக்கட்சியினருக்கு மகிழ்ச்சியையும், ஆளுங்கட்சியினருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கூட்டத்தில் பேசிய அவர், தன்னைக் குறிப்பிட்ட கட்சியினர் சங்கி என்று அழைப்பதற்கும், பி டீம் கட்சி என்று கூறுவதற்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, "அரசுக்கு எதிராக அவதூறாகப் பேசியதாக நம் தம்பிகளைத் தற்போது கைது செய்துவருகிறார்கள். இந்தக் கைதில் கூட நேர்மையான நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? துரைமுருகனை கைது செய்தார்கள், எவனும் வாய் திறக்கவில்லை.

ADVERTISEMENT

4 மாதம் பிணை கூட தராமல் இருந்தார்கள். அரசு தரப்பு வழக்கறிஞர் ஒவ்வொன்றாகக் குறைகூறி நீதிமன்றத்தில் வாதம் செய்தார். ஆனால் இது, மாரிதாஸை கைது செய்தபோது எங்கே போனது? 4 நாட்களிலேயே வழக்கை உடைத்து வெளியே வந்தாரே, அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்த்து வாய் திறக்கவில்லையே. இதிலிருந்து தெரியவில்லையா, யார் உண்மையான சங்கி என்று. நானாடா சங்கி? சங்கிப் பசங்களா, யாரைப் பார்த்து யார் சங்கி என்று சொல்றீங்க? (காலணியைக் கையில் எடுத்து காட்டுகிறார்). அமைதியாக இருக்கும் என்னை வெறிபிடிக்க வைத்துவிடாதீர்கள். நானும் கோபத்தை அடக்கி, அடக்கி, அடக்கி எவ்வளவோ முயன்று பார்க்கிறேன், என்னால் முடியவில்லை. என் மனைவி என்னை மறுபடியும் கராத்தே கிளாஸ்க்கு போகச் சொல்கிறாள்.

என்னைப் பற்றி பேசவில்லை என்றால் இவர்களுக்கு எந்த வீட்டிலும் கஞ்சி ஊத்த மாட்டார்கள். அதற்காக எதையாவது எப்போதும் உளறிக்கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். நான் புலி என்பதால் உங்களை எல்லாம் ஒரே அடியாகப் போட வேண்டும். ஆனால் உங்களை எல்லாம் அடித்துப் பார்க்கவா என்னைப் பெத்து வளர்த்திருக்கிறார்கள். என்னைத் திட்டி பிழைப்பு ஓட்ட வேண்டும் என்றால் செய்யுங்கள், சந்தோஷமாக இருங்கள். எனக்கு இது பழகிவிட்டது. தம்பிகள் எல்லாம் என்னைப் பற்றி அடுத்தவர்கள் தவறாகப் பேசினால் கொதிக்கிறார்கள். ஆரம்பத்தில் எனக்கும் அந்தக் கொதிப்பு இருந்தது. இத்தனை ஆண்டுகளில் அது வெகுவாக குறைந்துவிட்டது.

உங்களுக்கும் இன்னும் பத்து ஆண்டுகளில் அது புரிய ஆரம்பித்துவிடும். நீங்களே அப்போது இதைக் கடந்து போவீர்கள். அண்ணனைத் திட்டிவிட்டார்கள் என்று கோவப்பட்டு 400 பேர் கூட பார்க்காத வீடியோவை 40 ஆயிரம் பேர் பார்க்க வைக்கிறதும் நீங்கள்தான்! எதுவாக இருந்தாலும் என் முகம் இருக்கிறது. நான் அந்த செய்தியிலேயே இல்லையே, என் படத்தை எதற்கு வைத்தார்கள் என்ற குழப்பம் நம்மை ஆட்டிப் பிடிக்கிறது. விஷத்திலும் போடுறான், ரசத்திலும் என் போட்டோவ போடுறான், ஒரு மண்ணும் புரிய மாட்டேங்கிறது. தொலைந்து போறான் என்று விட்டுவிட வேண்டியதுதான்" என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT