ADVERTISEMENT

மத்திய அரசின் இடஒதுக்கீடு விவகாரத்தில் எடப்பாடியை கடிந்துகொண்ட கவர்னர்!

01:41 PM Oct 31, 2020 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

7.5 சதவிகித இடஒதுக்கீட்டு விவகாரத்தில் எடப்பாடியை கவர்னர் கடுமையாக எச்சரித்திருக்கிறார். 7.5 சதவிகித இடஒதுக்கீட்டை எடப்பாடி, சட்டமன்றத்தில் கொண்டுவந்து கவர்னருக்கு ஒப்புதல் பெற அனுப்பிய உடன் கவர்னருக்கு அதில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளது.

இந்த இடஒதுக்கீடு ஏற்கனவே தமிழகத்தில் நிலவியுள்ள 69 சதவிகித இடஒதுக்கீட்டிற்குள் வருமா? அல்லது 69 சதவிகித இடஒதுக்கீட்டை தாண்டி வருமா? என்பதுதான் கவர்னருக்கு ஏற்பட்ட சந்தேகம். இதுபற்றி மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் அவர்களின் கருத்தை கேட்டு கவர்னர் பைலை அனுப்பினார். அவர் பதிலளிக்க காலதாமதம் ஆனது.

இதற்கிடையே கவர்னருக்கு மத்திய அரசு எடப்பாடியை பற்றி ஒரு நோட் அனுப்பியது. அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு சட்டம் இயற்றி உள்ளது. அந்த சட்டம் இந்தியா முழுவதும் அமலாகிறது. தமிழகத்தில் அமலாகவில்லை. அந்த சட்டத்தில் சலுகைகளை பெற பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் என்கிற சான்றிதழை மாநில அரசு தரவேண்டும். அந்த சான்றிதழ் இல்லாமல் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு கல்வி நிலையங்கள் மற்றும் வேலைபெறும் நிறுவனங்களில் இந்த 10 சதவிகித முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை அமுல்படுத்த முடியாது.

இதுதொடர்பாக கவர்னரை சந்தித்த எடப்பாடியிடம் கவர்னர் நீங்கள் 10 சதவிகித இடஒதுக்கீட்டை அமுல்படுத்த முடியாது என சொல்வது தவறானது. அந்த இடஒதுக்கீட்டை மத்திய அரசு நிறுவனங்களில் செயல்படுத்த தேவையான சான்றிதழ்களையும் தரமாட்டேன் என்கிறீரர்கள், இது தவறு. இதில் ஒரு முடிவுக்கு நீங்கள் வராமல் 7.5 சதவிகித இடஒதுக்கீடு விவகாரத்திற்கு நான் ஒப்புதல் அளிக்க மாட்டேன் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துகிறது என கவர்னரிடம் தனிப்பட்ட முறையில் கூறிய எடப்பாடியிடம், கவர்னர் தெரிவித்தார்.

கடந்த வாரம் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய சாதியினர் என்கிற சான்றிதழை எடப்பாடியின் உத்தரவின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் கொடுத்தனர். அதன்பிறகே சொலிசிட்டர் ஜெனரலை தொடர்பு கொண்ட கவர்னர் அலுவலகம் உடனடியாக அவரது கருத்தை 7.5. சதவிகித இடஒதுக்கீட்டில் அரசு பள்ளி மணவர்கள் மருத்துவக் கல்லூரியில் இடம்பெறும் மசோதாவைப் பற்றி உடனடியாக தெரிவிக்கச்சொன்னார்.

சொலிசிட்டர் ஜெனரல் இந்த மசோதா 69 சதவிகித இடஒதுக்கீட்டில் மீறிய செயல் அல்ல என பதிலளித்தார். அந்த பதில் வந்ததும் நாங்கள் இதுத்தொடர்பாக ஒரு அரசாணை பிறப்பிக்கலாமா என எடப்பாடி கேட்டார். அதற்கு கவர்னர் அனுமதி அளித்தார். அதன் பிறகு இந்த இடஒதுக்கீடு மசோதாவுக்கு கவர்னர் தனது ஒப்புதலை அளித்தார்.

இப்படி கவர்னரின் எச்சரிக்கைக்கு அடிபணிந்து எடப்பாடி அரசு நடந்து கொண்டது. அதன் பிறகு கவர்னரை நேரில் சந்தித்து நன்றியை தெரிவித்தார் எடப்பாடி என்கிறது தமிழக அரசு வட்டாரங்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT