/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/gh_25.jpg)
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 63 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு மராட்டியத்திற்கு அடுத்தப்படியாக அதிகமாக இருந்து வருகின்றது. நாளுக்கு நாள் அதன் பாதிப்பு என்பது அதிகமாகிக்கொண்டே வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்நிலையில், இன்று மாலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்திக்க உள்ளார். கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக இருவரும் பேச வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. மாலை 4.30 மணி இந்தச் சந்திப்பு நடைபெற இருக்கின்றது. கடந்த இரண்டு மாதங்களில் மூன்றாவது முறையாக தமிழக முதல்வர் ஆளுநரைச் சந்திக்கிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)