ADVERTISEMENT

பாஜக ஒரு மீட்டிங் நடத்திட்டு... முடிந்தால் கருத்தால் சண்டைபோடு, அதைவிட்டுவிட்டு... பியூஸ் மானுஷ்

07:26 PM Mar 26, 2019 | kamalkumar

சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் ஆஞ்சிநேயரை அவமதித்துவிட்டார் என்பதுபோன்ற போலிச்செய்திகளை ஃபேஸ்புக்கில் பரப்பினர். மேலும் அவரது எண்ணையும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டனர். இதுகுறித்து அவர் கூறியது.

ADVERTISEMENT


காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக என அனைவரையும் நாம் எதிர்த்திருக்கிறோம், ஆனால் இப்படி ஃபேக் நியூஸ் போட்டு, போட்டு குடும்பத்தை தாக்குவது, இப்போது இன்னும் கீழ்மட்டத்திற்கு சென்று கடவுள் பெயரை வைத்து தாக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆஞ்சிநேயரைப்பற்றி அவதூறாக நாம் எதுவுமே பேசவில்லை. ஆனால் இவர்கள் இவ்வளவு கீழ்தரமாக இறங்குவார்கள் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. காலையிலிருந்து 400 ஃபோன் கால்கள் வந்துவிட்டன. அதில் 350 ஃபோன் கால்கள் அவை ஃபேக் நியூஸ் என தெரிந்துகொண்டு மன்னிப்பு கேட்டனர். அது மிகவும் நல்ல விஷயம். நிறையபேர் தாக்கவும் செய்துள்ளனர்.

ADVERTISEMENT

எப்போதும் நம்மைப்பற்றி ஃபேக் நியூஸ் பரப்புவார்கள் ஆனால் இந்தளவிற்கு இல்லை. சமீபத்தில் என்ன ஆச்சுனா, பாஜக ஒரு மீட்டிங் நடத்திட்டு இருந்தாங்க. அப்போது சாமி பாடல்கள், பக்தி பாடல்களெல்லாம் போட்டுட்டு இருந்தாங்க. நாம மதங்களை பயன்படுத்தாமல் ஓட்டுக்களை கேளுங்கள் என எதிர்த்தோம். இந்து மதத்தின் பாதுகாவலர்கள் நீங்கள் கிடையாது, இந்து மதத்தை நீங்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். நீ அதை ஓட்டுக்காக பயன்படுத்தாதீர்கள். இந்து மதம் நீ விளையாடக்கூடிய மைதானம் கிடையாது எனக்கூறினேன். அதற்கு அவர்கள் இது மதமில்லை, கலாச்சாரம் எனக்கூறினர். இது கலாச்சாரம் இல்லை, இது மதம்.

ஓட்டுக்காக மதம், ஜாதியை பயன்படுத்தக்கூடாது, நாம் அதில் தெளிவாக இருக்கிறோம். இதுகுறித்து பேசியதுதான் பெரிய ரகளை ஆகிவிட்டது. பறக்கும்படை வந்தவுடனே நாங்கள் அந்தப் பாடல்களையெல்லாம் போடவே இல்லை எனக்கூறிவிட்டனர். நான் புகார் கொடுத்துள்ளேன், நீ ஆஞ்சிநேயர் பாடல் போட்டீர்கள் என்று. ஆமாம் போட்டேன் என்று சொல்லிருக்கலாமே. வழக்குதானே போடுவார்கள், போடட்டும் என கூறவேண்டியதுதானே. அப்போது அவர்கள் உண்மையான பக்தர்கள். புகார் வந்தவுடனேயே நாங்கள் பாட்டே போடவில்லை எனக்கூறுகிறார்கள். இப்போது நான் ஆஞ்சிநேயர் குறித்து அவதூறாக பேசினார்கள் எனக்கூறி, பொய் செய்திகளை பரப்புகிறார்கள்.

நாம் பேசிக்கொண்டிருந்தபோதே அந்த ஃபேக் நியூஸை பார்த்துவிட்டு, அவருக்கு யாரோ கால் செய்திருக்கிறார்கள். அதில் அவர் பேசிவிட்டு வந்தார்.

கருத்திற்கு கருத்து மூலம் சண்டைபோடு. முடிந்தால் கருத்தால் சண்டைபோடு. அதைவிட்டுவிட்டு ஓடி, ஒளிந்து ஃபேக் ஐடிக்கள் மூலம், ஃபேக் நியூஸ்களைப் போட்டுதான் களத்தில் வெல்ல வேண்டுமென்றால் அதைவிட கேவலம் வேறெதுவுமில்லை. ஃபேக் நியூஸ் பரப்பவேண்டுமென்று எவனோ ஒருவன் மதத்தைக் கொச்சைப்படுத்தியிருக்கிறானே, அவன் எவ்வளவு கொடூரமானவனாக இருப்பான். நான் நித்தியானந்தாவை திட்டுவேன், உடனே அவன் இந்து கடவுளை திட்டுகிறேன் என்கிறான். இந்துக் கடவுள்களுக்கும், நித்தியானந்தாவிற்கும் வித்தியாசம் இல்லையா.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT