ADVERTISEMENT

'தினம் ஒரு மாவட்டத்தில், இன்று பெரம்பலூர்'... எந்த கட்சி பலம்... யாருக்கு பலவீனம்!

11:27 AM Jan 08, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

விவசாயம் பிரதானமாக இருக்கும் மாவட்டங்களில் பெரம்பலூர் மிக முக்கிய இடத்தை பெற்றுள்ள மாவட்டம். இங்கு சிமெண்ட் ஆலைகளிலும் கணிசமான அளவில் மக்கள் பணிபுரிகின்றனர். பெரம்பலூர் மாவட்டம், கடந்த 1995ம் ஆண்டு திருச்சி மாவட்டத்தில் இருந்து தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. இந்த மாவட்டத்தில் பெரம்பலூர், குன்னம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. மேலும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியும் இந்த மாவட்டத்தில் கூடுதலாக அமையப்பெற்றுள்ளது. ஆனால் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் பெரம்பலூரைத் தவிர மீதமுள்ள 5 சட்டமன்ற தொகுதிகளும் திருச்சி மாவட்டத்தில் அமையப்பெற்றுள்ளது. இந்நிலையில் பெரம்பலூரில் உள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிகளின் கள நிலவரம் என்ன என்பதை பார்ப்போம்.

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி:

விவசாயத்தைப் பிரதானமாக செய்யும் மக்களை பெருவாரியான கொண்ட தொகுதி. இந்த மாவட்டத்தில் இருந்து தமிழக அமைச்சரவையில் யாரும் அமைச்சராவில்லை என்ற குறை ஒருபுறம் நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் அமைச்சராக இருந்தபோது பல்வேறு சாலை திட்டங்கள் இந்த தொகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெரம்பலூர் தொகுதியில் கடந்த 1977ம் ஆண்டுக்குப் பிறகு 10 முறை சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில், 5 முறை அதிமுக வெற்றிபெற்றுள்ளது. திமுக மூன்று முறை வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா ஒருமுறை வெற்றிபெற்றுள்ளது. தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக அதிமுகவைச் சேர்ந்த தமிழ்செல்வன் உள்ளார். இவர் கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் இதே தொகுதியில் வெற்றிபெற்றிருந்தார். 1980,1996 மற்றும் 2006 ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்றுள்ளது. இந்த தொகுதியில் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குன்னம் சட்டமன்ற தொகுதி:

குன்னம் சட்டமன்ற தொகுதி கடந்த 2011ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதி ஆகும். இங்கு நடைபெற்ற முதல் தேர்தலில் திமுகவைச் சேர்ந்த எஸ்.எஸ்.சிவசங்கர் தேமுதிக வேட்பாளரான துரை.காமராஜை தோற்கடித்தார். அந்த வகையில் குன்னம் தொகுதியில் நடைபெற்ற முதல் தேர்தலில் திமுக தன்னுடைய வெற்றியைப் பதிவு செய்தது. அடுத்த நடைபெற்ற 2016ம் ஆண்டு தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த ஆர்.டி ராமசந்திரன் வெற்றிபெற்றார். இந்த முறையும் அதிமுக சார்பாக அவரே போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக சார்பாக இத்தொகுதி கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கிட்டதட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய பெரிய தொகுதி குன்னம். இந்த முறை இரண்டு கட்சிகளும் வெற்றிக்கு கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT