perambalur

Advertisment

பெரம்பலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 139 நபர்களும் சிகிச்சை முடித்து பூரணமாக குணமடைந்து அவர்களது வீட்டிற்கு சென்றனர்.

இந்நிலையில் முற்றிலும் கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறியது பெரம்பலூர் மாவட்டம்.இதற்காக ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து மருத்துவர்கள், துப்புரவு பணியாளர்கள், சுகாதார துறையினர் மற்றும் பொதுமக்களுக்கு பெரம்பலூர் மாவட்ட காவல்துறையின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் கொரோனா தொற்றில்லாமல் நமது மாவட்டத்தை பாதுகாப்பது நமது கடமையாகும் என பெரம்பலூர் மாவட்ட காவல்துறைசார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.