/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hand-in_18.jpg)
பெரம்பலூர் மாவட்டம்,வி.களத்தூர் அருகே, சுவர் இடிந்துவிழுந்த விபத்தில், கூலித் தொழிலாளியின் மகளான7 வயது சிறுமி உயிரிழந்தார்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள வி.களத்தூர் அருகே பசும்பலூர் கிராமத்தில் வசிக்கும் வெங்கடேசன் -திருச்சடை தம்பதியினரின் 7 வயது மகள்யோசனா என்பவர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில், சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், சிறுமியின் அருகில் படுத்து உறங்கிய, அவரின் தங்கை, 5 வயது பெண் குழந்தையான கீர்த்தனா, மற்றும் ஒன்றரை வயது ஆண் குழந்தை ராமு ஆகிய இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்து குறித்து வி.களத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)