ADVERTISEMENT

'பல பேர் வாயில நக்கீரன்னு பேர வர வைக்கவே போராட வேண்டி இருக்கு' - நக்கீரன் ஆசிரியர் பேச்சு!

03:15 PM Oct 03, 2019 | suthakar@nakkh…

நாடக கலைஞர்களையும், மேடை நாடகங்களையும் ஊக்குவிக்கும் முயற்சியாக சென்னையில் முதல் முறையாக பிரம்மாண்ட நாடகத் திருவிழா நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் கேரள சமாஜம் இணைந்து நடத்தும் இந்த நாடகத் திருவிழாவில் தென்னிந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 500 நாடக கலைஞர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். நேற்று தொடங்கிய இந்த நாடகத் திருவிழா வரும் 6 ஆம் தேதி வரை, 5 நாட்கள்கள் நடைபெற உள்ளது. இந்த விழாவில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர் நாசர், மதுரை எம்.பி சு.வெங்கடேசன், நக்கீரன் ஆசிரியர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

நக்கீரன் ஆசிரியர் தன்னுடைய உரையில் பேசியதாவது, " இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைவருக்கும் இந்த சிறப்பான நேரத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ள கடமைப்படுள்ளேன். இந்த நிகழ்ச்சி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் நடைபெறுகிறது என்று சொன்னார்கள். இதுபோன்ற கலை விழாக்கள் தொடர வேண்டும். இந்த விழாவிற்கு வருவதற்கே மிகவும் கடினமான சூழ்நிலைகளை கடந்துதான் வர வேண்டிய சூழல் ஏற்பட்டது.

ADVERTISEMENT



என்னோடு 30 வருடங்களாக இருக்கும் நண்பர் ஒருவருடைய அம்மா தவறிவிட்டார், எங்கள் ஊருக்கு அருகில் நாளைக்கு அவருக்கு இறுதி சடங்கு நடைபெற உள்ளது. இதற்காக நான் சென்றுவிட்டேன் என்றால், பத்திரிக்கையில் பெயர் போடாததால் அவர் வரவில்லை என்று சொல்லவும் வாய்ப்புள்ளது. எதற்கு நாமே அந்த வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று நேற்றே அவசர அவசரமாக அந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு நேராக இங்கே வந்துள்ளேன். இந்த மாதிரியான நல்ல விஷயங்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்.

அதுவும் கேரள சமாஜம் மின்சாரத்துடன் கூடிய அரங்கை வழங்கியுள்ளதை பார்க்கும் போது மிகவும் நெகிழ்வாக இருக்கிறது. அதையும் தாண்டி குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் பல பேர் வாயில் நக்கீரன் என்ற வார்த்தையை வர வைக்கவே நாம ரொம்ப கஷ்டபட வேண்டி இருக்கிறது. நம்மை கஷ்டப்படுத்ததான் ஒரு ஆள் போனா இன்னொரு ஆள் வந்துகிட்டு இருக்காங்க. நம்முடைய வேலை அப்படி. எனவே இந்த மாதிரியான நல்ல நிகழ்ச்சிக்கு நக்கீரன் எப்போதும் துணை நிற்கும் என்பதை உறுதியாக தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.

ADVERTISEMENT


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT