ADVERTISEMENT

நக்கீரன் ஆக்‌ஷன் ரிப்போர்ட்! 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மீது அதிரடி நடவடிக்கை!

07:25 PM Oct 10, 2019 | rajavel

ADVERTISEMENT

சென்னை ஈ.சி.ஆர்., ஓ.எம்.ஆர்., ஜி.எஸ்.டி. சாலைகளில் யாராவது விபத்துக்குள்ளாகியோ நோயின் காரணமாகவோ உயிருக்குப் போராடிக்கோண்டிருப்பவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து உயிரைக்காப்பாற்றாமல் தூரத்திலுள்ள பிரபல குளோபல் மருத்துவமனைகளில் கொண்டுபோய் சேர்த்து 5,000 ரூபாய் முதல் 1 லட்ச ரூபாய் வரை கமிஷன் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள், டெக்னிஷியன்கள் மற்றும் கோ-ஆர்டினேட்டர்கள் என்ற பகீர் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, "உறுப்புத் திருடும் தனியார் மருத்துவமனைகள்! துணைபோகும் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள்! என்றத் தலைப்பில் கடந்த 2019 செப்டம்பர்-28 அக்டோபர்-01 நக்கீரன் இதழில் ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தினோம்.

ADVERTISEMENT


இதுகுறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விராணைக்கு உத்தவிட்டார். நக்கீரன் கொடுத்த ஆதாரங்களை வைத்து விசாரணை செய்ததில் குற்றம் நிரூபிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் 10 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதோடு 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு விசாரணையில் இருப்பதாக நம்மிடம் ர் 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது .


பொதுமக்களின் உயிருக்கு உலைவைக்கும் இவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். மேலும், இவர்களுக்கு துணையாக இருந்த 108 ஆம்புலன்ஸ் கோ- ஆர்டினேட்டர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT