பல்வேறு தளர்வுகளுடன் 4-ஆம் கட்ட ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் தமிழக அரசின் அனைத்து அலுவலகங்களும் இன்று (திங்கட்கிழமை) முதல் பாதி எண்ணிக்கையிலான ஊழியர்களுடன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று முதல் அரசு அலுவலகங்கள் செயல்படுவதால் அரசு ஊழியர்கள் மாநகரப் பேருந்துகளில் அழைத்து வரப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் மாநகரப் பேருந்தில் அழைத்து வரப்பட்டனர். 50 சதவிகித ஊழியர்களுடன் அனைத்துத் துறை அலுவலகங்களும் இயங்கின.
தலைமைச் செலயகத்தில் 50 சதவிகித ஊழியர்களுடன் அனைத்துத் துறை அலுவலகங்களும் இயங்கின (படங்கள்)
Advertisment