ADVERTISEMENT

மோடி பதிலளித்த கேள்விகளும், பதில் சொல்லவேண்டிய கேள்விகளும்!

01:30 PM Apr 29, 2019 | Anonymous (not verified)

மோடி இதுவரை சில தனிப்பட்ட பேட்டிகள் கொடுத்திருக்கிறார். அவற்றில் மோடியை பேட்டி கண்டவர்கள் கேட்ட கேள்விகள் மூலம் மோடியைப்பற்றி நாம் அறிந்தவை என்ன?

ADVERTISEMENT

ADVERTISEMENT

மோடிக்கு மாம்பழம் பிடிக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் மோடி வனப்பகுதிக்கு செல்வார்.

அவரே அவருடைய உடைகளை துவைத்துக் கொள்வார்.

தினமும் யோகா செய்வார்.

மோடி எப்போது தூங்குவார்.

மோடியின் உடல்பலத்துக்கு காரணம் என்ன?

மோடியின் சாப்பாட்டு பழக்கம்.

தனது சம்பளத்தை மோடி என்ன செய்கிறார்?

நடிகை ட்விங்கிள் கன்னாவை ட்விட்டரில் மோடி பின் தொடரும் விஷயம்.

ஒபாமாவுடன் மோடிக்கு உள்ள உறவு.

மோடியின் ஆடை வடிவமைப்பாளர் பற்றிய விவரங்கள்.

இவற்றைப் பற்றியெல்லாம் பேட்டி கண்டவர் கேட்ட கேள்விகளுக்கு மோடி பதில் சொல்லியிருக்கிறார்.

ஆனால், பேட்டி கண்டவர் எதைப்பற்றியெல்லாம் கேள்வி கேட்டிருக்க வேண்டுமோ, மோடி எதைப்பற்றியெல்லாம் நாட்டு மக்களுக்கு விளக்கம் அளித்திருக்க வேண்டுமோ அதையெல்லாம் கேட்கவும் இல்லை. மோடி பதில் சொல்லவும் இல்லை…

மோடியிடம் மக்கள் அறிந்துகொள்ள விரும்பும் விவரங்களைப் பார்ப்போமா?

1.பணமதிப்பிழப்பின் நோக்கங்கள் என்னாயிற்று?

2.ஐந்து ஆண்டுகளில் வேலை இழந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 50 லட்சம் என்கிறார்களே உண்மையா?

3.ஐந்து ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

4.42 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கருப்புப்பணம் இருப்பதாக சொன்ன மோடி, எவ்வளவு கருப்புப்பணத்தை கைப்பற்றி இந்தியாவுக்கு கொண்டுவந்தார்?

5.தியாகியான ஹேமந்த் கார்கரேவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காத மோடி, பயங்கரவாத குற்றம்சாட்டப்பட்ட பெண் சாமியார் பிரக்யாவுக்கு எப்படி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தார்?

6.கல்வி மற்றும் ஆராய்ச்சிகளுக்கு முந்தைய அரசுகள் ஒதுக்கிய நிதியை மோடி ஏன் குறைத்தார்?

7.இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் என்னவென்று மோடி சொல்வாரா?

8.புல்வாமாவில் தீவிரவாத தாக்குதலில் ஏற்பட்ட உளவுத்துறை தவறுக்கு யார் பொறுப்பு?

9.தேர்தல் பிரச்சாரத்தில் நாட்டின் வளர்ச்சி குறித்து மோடி ஏன் பேசவே மறுக்கிறார்?

10.ரஃபேல் விமான பேர ஊழல் தொடர்பான விவகாரத்தில் விமான விலையில் ஏன் ரகசியம் கடைப்பிடிக்கப்படுகிறது?

11.9 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கான பெட்ரோல் டீசல் மீதான வரி என்னாயிற்று?

12.பாஜகவுக்கு தேர்தல் நிதி வசூலித்ததில் ரகசியம் காக்கப்படுவது ஏன்?

13.அன்னிய நேரடி மூலதனத்தையும் ஆதார் விவகாரத்திலும் குஜராத் முதல்வராக இருந்தபோது எதிர்நிலையை எடுத்திருந்த மோடி, பிரதமரானதும் நிலையை மாற்றிக்கொண்டது ஏன்?

14.சர்வதேச எண்ணெய்விலை குறைந்தபோதும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை அதிகமாக இருப்பது ஏன்?

15.டாலரின் மதிப்பை ரூபாய் மதிப்பில் 35 ரூபாய் அளவுக்கு மாற்றுவதாக சொன்னது என்னாச்சு?

16.விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெஹுல் சோக்ஸி உள்ளிட்டோர் நாட்டைவிட்டு தப்பியது எப்படி?

17.பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, முந்தைய ஆட்சிக்காலத்தைவிட, எல்லைப் பகுதியில் எப்படி அதிகமான வீரர்கள் உயிரிழந்தனர்?

18.பாஜக பதவியேற்ற இந்த ஐந்தாண்டு காலத்தில் இந்தியாவில் ஏன் முந்தைய ஆட்சிகளைவிட அதிகப்படியான பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது?

19.பாஜகவைத் தொடங்கி, வளர்த்த அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் மோடியின் உறவு எப்படி இருக்கிறது?

செய்தியாளர்களைச் சந்திக்க மோடி பயப்படுகிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து பிரணாய் ராய், அக்‌ஷய் குமார் போன்ற சில தனிப்பட்ட நபர்களுக்கு முன்னரே தயாரிக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலைத் தயாரித்து செயற்கையாக ஒரு பேட்டியை மோடி கொடுத்தார். அந்தப் பேட்டிகளிலும்கூட மோடியின் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து மட்டுமே கேள்விகள் இடம்பெற்றன. மேற்படு மிக முக்கியமான 19 அரசியல் தொடர்பான கேள்விகள் இடம்பெறவே இல்லை.

நீங்களே சொல்லுங்கள் மேலே உள்ள 19 கேள்விகளுக்கும் மோடி பதிலளிக்க கடமைப்பட்டிருக்கிறாரா இல்லையா? ஆம் என்றால், இந்தக் கேள்விகளுக்கு ஏன் அவர் தேர்தல் பிரச்சாரத்திலும்கூட விளக்கம் அளிக்க மறுக்கிறார்?

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT