ADVERTISEMENT

"4 மணி நேரம் குரல் எழுப்பினோம்... ஆனால் இந்தியாவில் யாருக்கும் தெரியாது" சு. வெங்கடேசன் ஆதங்கம்!

03:56 PM Oct 03, 2019 | suthakar@nakkh…


நாடக கலைஞர்களையும், மேடை நாடகங்களையும் ஊக்குவிக்கும் முயற்சியாக சென்னையில் முதல் முறையாக பிரம்மாண்ட நாடகத் திருவிழா நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் கேரள சமாஜம் இணைந்து நடத்தும் இந்த நாடகத் திருவிழாவில் தென்னிந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 500 நாடக கலைஞர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். நேற்று தொடங்கிய இந்த நாடகத் திருவிழா வரும் 6 ஆம் தேதி வரை, 5 நாட்கள்கள் நடைபெற உள்ளது. இந்த விழாவில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர் நாசர், மதுரை எம்.பி சு.வெங்கடேசன், பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

ADVERTISEMENT



ADVERTISEMENT

விழாவில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசும் போது, " நீண்ட நாட்களுக்கு பிறகு இத்தகைய விழாக்கள் நடக்க ஆரம்பித்துள்ளது. எந்த ஒரு கலைஞனும் எதிர் அரசியலில் தான் பயணிக்க வேண்டியுள்ளது. அதுவே மண் சார்ந்தும், மக்கள் சார்ந்தும் இருக்கும். நாடக கலைஞர்களிடம் நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அவர்களின் இடைவிடாத உழைப்பு என்பது யாராலும் ஈடு செய்ய இயலாது. கடந்த நாடாளுமன்ற கூட்டத்தின் கடைசி நாளில் காஷ்மீர் மசோதா நிறைவேற்றப்பட்ட போது அதற்கு எதிராக நான்கு மணி நேரம் கோஷம் எழுப்பினோம். ஆனால் இந்தியாவில் யாருக்கும் அது தெரியாது. அப்போது நான் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதில் உள்ள சிரமங்களை சந்தித்தோம். அந்த வகையில் செய்யும் வேலையில் உறுதியாகவும், தெளிவாகவும், கடினமாகவும் ஆற்றலை வெளிப்படுத்தும் இத்தகைய கலைஞர்களையும், கலைகளையும் வளர்க்க வேண்டும். கடந்த 30 ஆண்டுகளில் பொதுப்பணித்துறை கட்டிய எந்த ஒரு கட்டடங்களிலும், கலை உணர்வு வெளிப்படவில்லை என்பதே எதார்த்த உண்மை" என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT