ADVERTISEMENT

காலையில் மலர்ந்து மாலையில் கருகியது - கர்நாடக தாமரை அரசியல்

05:52 PM May 15, 2018 | rajavel


நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாமல் முடிவுகள் வந்துள்ளது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் இரண்டு தொகுதிகளில் தேர்தல் நிறுத்தப்பட்டு 222 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று இன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் கூடுதல் இடங்களை பெற்று 104 தொகுதிகளையும், காங்கிரஸ் 78 தொகுதிகளையும், மதசார்பற்ற ஜனதா தளம் 38, சுயேட்சைகள் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

ADVERTISEMENT

இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தது. ஒரு கட்டத்தில் 124 தொகுதிகளை பாஜகவும், காங்கிரஸ் 68 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதாதளம் 32 தொகுதிகளிலும் முன்னிலை என செய்திகள் வெளியாகின. நண்பகல் வரை பாஜக தொடர் முன்னிலையில் இருந்தது. இதனால் உற்சாகம் அடைந்த கர்நாடக பாஜகவினர் குத்தாட்டம் போட்டு கொண்டாடினார்கள். அதன் எதிரொலியாக தமிழகத்திலும் ஆங்காங்கே பாஜகவின் ஆட்டம் பாட்டம் நடந்தது. அக்கட்சியின் தமிழக தலைவரான தமிழிசை சவுந்தரராஜன், சென்னையில் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு கர்நாடகாவின் வெற்றி தென்நாட்டில் பாஜகவுக்கு வாசல் திறந்தது என்று கூறினார்.

ADVERTISEMENT

பாஜகவின் தேசிய செயலாளரான எச்.ராஜா, கர்நாடகாவில் பாஜக வலுப்பெறும் சக்தியாக வந்துவிட்டது. அடுத்து தமிழகமும் திரிபுராவாக மாறும் என்றார். இப்படி இவர்கள் மனம்போன போக்கில் கொண்டாடிக்கொண்டிருக்க கர்நாடகா வாக்கு எண்ணிக்கை கதை மாறத் தொடங்கியது.

124 என்ற கணக்கு 114 ஆகி, அடுத்து 110 ஆகி, ஒவ்வொன்றாக குறைந்து 104ஆக சுருங்கியது. காங்கிரஸ் 68 என்ற கணக்கு உயரத்தொடங்கி, 78ல் நின்றது. அதே மதசார்பற்ற ஜனதாதளம் 38ஆக வளர்ந்தது. பிற்பகலுக்கு பிறகு இந்த முடிவுகள் வெளிப்பட பரபரப்பான அரசியல் திருப்பங்களும் நடந்தது. காங்கிரஸ் உயர்மட்ட குழு டெல்லியில் விவாதித்தது. அதன்படி பாஜகவை தென்நாட்டில் விடக்கூடாது என்று முடிவு செய்து முதல் அமைச்சர் சித்தராமையா அக்கட்சியின் மாநிலத் தலைவர் பரமேஸ்வரா உட்பட முன்னணி தலைவர்களோடு தொலைபேசி வாயிலாகவோ ஆலோசனை வழங்கி மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவோம். இதன் மூலம் கர்நாடகாவில் பாஜகவின் அதிகார கனவை அறுத்தெறிவோம் என முடிவு செய்தார்கள்.

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்களுடைய சிந்தனையும் அதுவாகவே இருந்தது. டெல்லி ஆலோசனைக்கு ஏற்க உடனடியாக களம் இறங்கிய காங்கிரஸ் மூத்த குலாம் நபி ஆசாத், மதசார்பற்ற ஜனதா தளத்தின் நிறுவனரான தேவகவுடா மற்றும் அவரது மகனும், முன்னாள் முதல் அமைச்சருமான குமாரசாமியிடம் நேரில் சென்று பேசினார். அதன்படி குமாரசாமிக்கு முதல் அமைச்சர் பதவியை கொடுப்பதாக முடிவு செய்யப்பட்டு துணை முதல்வராக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரான பரமேஸ்வராவை நியமிப்பது என்றும், இரண்டு கட்சி தரப்பிலும் உறுதி செய்யப்பட்டது.

மஜக சார்பாக ஒரு நாள் அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் தரப்பு அவகாசமே வேண்டாம், தேர்தல் முடிவு முழுமையாக வெளிவந்தவுடன் எங்களது ஆதரவு கடிதத்தோடு, ஆட்சி அமைக்க கோருமாறு கவர்னரை சந்தியுங்கள் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் இந்த திடீர் திருப்பம் பாஜகவை அதிர்ச்சியடைய வைத்தது. டெல்லி வரை கர்நாடக நிலவரம் பாஜகவை அதிரவைத்துள்ளது. காலையில் இருந்து மாலை வரை தென்னாட்டில் தாமரை மலர்ந்தது என்று மகிழ்ந்து கொண்டாடிய பாஜக மாலையில் அது பறிபோனது என துக்கத்தில் மூழ்கியுள்ளது.

இருப்பினும் கர்நாடக கவர்னர் வஜ்ஜிபாய் லாலாவுக்கு டெல்லியில் இருந்து சில அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர் செயல்பட தொடங்கியுள்ளார். இந்த அரசியல் ஆட்டத்தில் பாஜக அடுத்தடுத்து என்ன செய்யப்போகிறது என்பது கர்நாடகாவில் பரபரப்பு தொடங்கியுள்ளது. முதல்வர் கனவில் இருந்த எடியுரப்பா காங்கிரஸ் பின் வாசல் வழியாக ஆட்சி முற்பட்டுள்ளது என கூறியிருக்கிறார். காங்கிரஸ் மாநிலத் தலைவர் பரமேஸ்வரா, பின் வாசல் வழியாக நாங்கள் ஆட்சி அமைக்கவில்லை. சட்டமன்றத்தில் அதிக பெரும்பான்மையாக உள்ள எங்கள் அணி ஆட்சி அமைக்கிறது. எங்களது நோக்கம் ஆட்சி அதிகாரம் அல்ல, மதவாத சக்திகளை தென்னிந்தியாவில் நுழையவிடக்கூடாது என்கிற போராட்டத்தில் நாங்கள் தியாகம் செய்து வெற்றி பெற்றுள்ளோம் என பதலடி கொடுத்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT