ADVERTISEMENT

இந்தி திணிப்பு... குரங்குகள் கூட அதனை ஏற்றுக்கொள்ளாது - மருத்துவர் ஷாலினி

11:07 AM Sep 18, 2019 | suthakar@nakkh…


கடந்த வாரம் உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி மொழி நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியாக இருக்க வேண்டும் என்றும், அவ்வாறு இருந்தால் நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

பல நாடுகள் ஒரு மொழியை வைத்துக்கொண்டு இதுதான் எங்கள் தேசிய மொழி என்று சொல்லவில்லை. சிங்கப்பூர் அப்படி சொல்லவில்லை. நியூசிலாந்தில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருந்தால் கூட, மயோரி என்ற அந்த நாட்டின் பழங்குடி மொழியும் ஆட்சி மொழியாக உள்ளது. இப்போது நீங்கள் அமெரிக்கா சென்றால் கூட உங்களுக்கு ஆங்கிலத்தோடு ஸ்பானிஸ் மொழியும் தெரிந்திருக்க வேண்டும். அங்கே இருக்கின்ற பூர்வகுடி மக்களுக்கு ஸ்பானிஷ்தான் தெரியும். அதனால் பூர்வகுடி மொழிகளுக்கும் அங்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நீங்கள் மொழி சம்பந்தமான எந்த ஒரு ஆய்வை எடுத்துக்கொண்டாலும் இங்கே பூர்வகுடி மொழிகளாக தமிழ், தெலுங்கு, மலையாளம், துளு முதலிய திராவிட மொழிகள்தான் இருந்தது. அப்படி என்றால் இந்த மொழிகளில் ஒன்றைத்தானே தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும். அல்லது இந்த மொழிகளை கலந்து புதிய மொழியை தானே கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் திணித்து எந்த மொழியையும் பேச வைக்க முடியாது. உங்கள் மொழி உயர்வானது, எல்லா மக்களுக்கும் அது எளிதாக புரியும் என்றால் அதனை அனைவரும் விரும்பி கற்றுக்கொள்ள போகிறார்கள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


அப்புறம் எதற்காக அதனை கட்டாயப்படுத்தி திணிக்க முயற்சி செய்கிறீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் திணித்து செயல்படுத்தலாம் என்றால் அதில் தோல்விதான் ஏற்படும். ஒரு மிருக காட்சி சாலையில் உள்ள இரண்டு குரங்களில் ஒரு குரங்குக்கு கேரட்டும், மற்றொரு குரங்குக்கு திராட்சையும் கொடுத்து பாருங்கள். கேரட் கொடுத்த குரங்கு அதனை ஏற்றுக்கொள்ளாது. குரங்கே இந்த அளவுக்கு சுயமரியாதையோடு இருக்கும்போது மனிதனிடம் அதை எதிர்பார்க்காது இருக்க முடியுமா? அனைத்து மொழிகளையும் விருப்பத்தின் பேரில் கற்றுக்கொள்ளலாம். ஆனால், கட்டாயப்படுத்தினால் அந்த மொழியின் மீது வெறுப்புத்தான் வருமே தவிர, வார்த்தைகள் வராது. இந்தி படித்தால் எத்தனை நாட்டுக்கு நம்மால் செல்ல முடியும். தமிழ் படித்தாலாவது நான்கைந்து நாடுகளுக்கு நம்மால் செல்ல முடியும். பெரிய கதவு நமக்கு திறந்திருக்கும்போது, குட்டி கதவு இந்தியை நாம் ஏன் படிக்க வேண்டும். ஆங்கிலம் படித்தால்தான் நாம் உலகத்தோடு தொடர்பு கொள்ள முடியுமே? அப்புறம் எதற்கு இந்த திணிப்பு வேலை. ஒரு மொழியை அழித்துவிட்டு மற்றொரு மொழியை வளர்ப்பது என்பது இயலாத காரியம்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT