ADVERTISEMENT

நாங்கள் பட்டதுபோதும்... எங்களை கருணை கொலை செய்துவிடுங்கள்: பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கண்ணீர்

03:16 PM Jun 15, 2018 | rajavel


ராஜீவ் கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரையும் மனிதாபிமான முறையில் விடுதலை செய்ய கடந்த 4 ஆண்டுகளில் இரண்டு முறை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் கைதிகளின் விடுதலை குறித்து 3 மாதத்தில் முடிவெடுக்கும்படி உள்துறை அமைச்சகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT


உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் கடந்த பிப்ரவரி மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் கைதிகளின் உடல்நலம் மற்றும் மனநலம் குறித்த விவரங்களை கேட்டு தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியது. ஆனால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்துள்ளதாக செய்திகள் வெளியானது.

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் பேசிய பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள்,

இந்த விஷயத்தில் மத்திய அரசின் மீது நம்பிக்கையை இழந்துவிட்டோம். இந்த வழக்கில் குடியரசுத் தலைவர் இப்போது வருவது ஏன் என்று எனக்கு புரியவில்லை. இந்த வழக்கில் வாக்குமூலம் வாங்கிய அதிகாரிகளில் இருந்து நீதிபதிகள் வரை எல்லோருமே இவர்களை விடுதலை செய்யலாம் என்று சொன்னார்கள். மாநில அரசும் எங்களது நிலைப்பாடும் அதுதான், மத்திய அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம் என்று சொல்லியிருக்கிறது.


இவர்கள் இரண்டு பேரின் ஆட்சியில் நாங்கள் பட்டதுபோதும். 27 ஆண்டுகளாக போராடி பார்த்துவிட்டோம். நான் முடிவு பண்ணிவிட்டேன். இந்த இரண்டு அரசுகளுக்கும் மனு கொடுக்கப்போகிறேன். என் மகனுக்கு 47 வயது. என் மகனை கருணை கொலை பண்ணிவிடுங்கள். என்னை சாகடித்துவிடுங்கள். உங்கள் ஆட்சியில் நாங்கள் வாழ்ந்தது போதும் என்று மனு கொடுக்கப்போகிறேன். வேறெதுவும் இல்லை. இதற்கு மேல் போராட முடியவில்லை. எவ்வளவுதான் போராட முடியும். எங்களது வாழ்க்கையே போய்விட்டது. வெளியே நானும், உள்ளே என் மகனும்... வாழ்க்கையையே நாசம் பண்ணிவிட்டார்கள் என கண்ணீரோடு கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT