/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/606_47.jpg)
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும், பேரறிவாளன் தன்னை விடுவிக்ககோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் அவரைவிடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பேரறிவாளன் விடுதலைக்காக அவரது தயார் பல சட்ட போராட்டங்களை நடத்தி உள்ளார். இதனையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில்நடிகர் சூரி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "பத்து மாதம் வயிற்றில் சுமந்த தாய் நமக்குத் தெய்வம். 31 வருடங்களாக பெற்ற மகனுக்காகப் பாரம் சுமந்த தாய் இதிகாசத்தில் கூட இப்படியொரு தாயைப் பார்த்திருக்க முடியாது. இந்தப் பெரும் பணியைச் செய்வார் எனத் தெரிந்துதான் அற்புதத்தம்மாள் எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். அற்புதம் அம்மா" எனக் குறிப்பிட்டுள்ளார்.
பத்து மாதம் வயிற்றில் சுமந்த தாய் நமக்குத் தெய்வம். 31 வருடங்களாக பெற்ற மகனுக்காகப் பாரம் சுமந்த தாய் இதிகாசத்தில்கூட இப்படியொரு தாயைப் பார்த்திருக்க முடியாது. இந்தப் பெரும் பணியைச் செய்வார் எனத் தெரிந்துதான் அற்புதத்தம்மாள் எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். அற்புதம் அம்மா...? pic.twitter.com/IYc9m7KYRP
— Actor Soori (@sooriofficial) May 19, 2022
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)