ADVERTISEMENT

ட்ரம்பிடம் சாவர்க்கர் சிலையை காட்டியிருக்கலாமே ஏன் காந்தி சிலையை காட்டினீர்கள் - ஆளூர் ஷானவாஸ் பேச்சு!

11:22 PM Feb 27, 2020 | suthakar@nakkh…

நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் சில மாதங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், தற்போது இதனை எதிர்த்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. டெல்லியில் சில தினங்களாக நடைபெற்ற வன்முறையில் 30க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளார்கள். இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி நள்ளிரவில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஆளூர் ஷானவாஸிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

அமெரிக்க அதிபரும், இந்திய பிரதமரும் சந்திக்க இருந்த தினத்தில் குடியுரிமை விவகாரத்தை மையப்படுத்தி இந்தியாவை கலவர பூமியாக காட்ட இஸ்லாமியர்கள் முயற்சி செய்ததே இந்த கலவரத்துக்கு காரணம் என்று வலதுசாரி சிந்தனையாளர்கள் கூறுவதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஒரு விருந்தினர் வருகின்ற போது, சட்டம் ஒழுங்கு பிரச்சனையை அதன் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் எப்படி செய்வார்கள் என்பது இந்த விவகாரத்தில் வலதுசாரிகளின் கேள்வியாக இருக்கின்றது. ஒடிசாவில் பாதிரியார் ஒருவரை உயிரோடு எரித்துக்கொன்றார்களே அவர்கள் யார், அவர்களும் இந்த நாட்டிற்கு விருந்தினர்களாக வந்தவர்கள் தானே? அதனால் இவர்களுக்கு
அதெல்லாம் ஒரு பொருட்டல்ல. அந்த வழக்கில் தொடர்புடையவர் தற்போது எங்கே இருக்கிறார். நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்து கொண்டிருக்கிறார். அதனால் விருந்தினர் வருகையை பற்றி இந்த கும்பல் ஏன் கவலைப்பட போகின்றது. விருந்தினர்களையே போட்டுதள்ளிய கும்பல் தான் இந்த கூட்டம். அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் எதையாவது அவர்கள் காட்ட வேண்டும். இவர்கள் உருவாக்கிய எதையாவது அவர் பார்க்க வேண்டும். அவர்கள் உருவாக்கிய எதை அவரிடம் இவர்களால் காட்ட முடியும். 3000 கோடி ரூபாய் பணத்தில் பட்டேல் சிலையை உருவாக்கி வைத்துள்ளார்கள். அதை அவரிடம் காட்ட முடியுமா? சாவர்க்கர் நினைவிடத்திற்கு அவரை அழைத்து சென்றார்களா?

ADVERTISEMENT



ADVERTISEMENT

ட்ரம்ப் எதையெல்லாம் பார்த்தார். அவர்களின் கொள்கைக்கு நேர் எதிரான மகாத்மா காந்தி நினைவிடத்தை பார்த்தார். எதை வரலாற்றின் துயரமாக இதுவரை சொல்லிவந்தார்களோ அந்த தாஜ்மஹாலைத்தான் முதலில் பார்த்தார். எந்த தாஜ்மஹாலை இடிக்க வேண்டும் என்று சொல்லி வருகிறார்களோ அந்த தாஜ்மஹாலைத்தான் யோகி ஆதித்யநாத் ட்ரம்புக்கு நினைவு சின்னமாக கொடுத்தார். எந்த தாஜ்மஹாலை அவமானம் என்று சொல்லிவந்தார்களோ, காந்தியை சுட்டுக்கொன்றவனை தேசபக்தர் என்று சொன்னார்களோ அவர்களே அந்த தாஜ்மஹாலுக்கும், காந்தி நினைவிடத்துக்கும் ட்ரம்புடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்படிப்பட்ட அடையாளம் தான் இந்தியாவின் அடையாளம் என்று அமெரிக்க அதிபர் சொல்லிவிட்டு சென்றுள்ளார். உலகம் இந்தியாவை இதன் வழியாகத்தான் பார்க்கிறது என்று குறிப்பெழுதிவிட்டு சென்றுள்ளார். இந்த விஷயங்களில் எல்லாம் அவர்களுக்கு முரண்டாடுகள் இருந்தாலும், ஆத்திரம் இருந்தாலும் வேறு வழியில்லாமல் அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதை போல் நடிக்கிறார்கள்.

ஏன் ட்ரம்பிடம் சாவர்க்கர் சிலையை காட்டியிருக்கலாமே? ஏன் காட்டவில்லை, ட்ரம்பிடம் உங்களிடம் நாங்கள் எப்படி அடிமையாக இருந்தோமே அதைப்போல உங்களின் முன்னோர்களிடம் இவர் அடிமையாக இருந்தார் என்று சொல்லியிருக்கலாமே? அதை அவர்கள் ஏன் செய்யவில்லை. சங்கிகளிடம் என்ன வரலாறு இருக்கின்றது. 100 வருடங்களில் அவர்கள் தங்களின் வரலாறாக என்ன உருவாக்கி வைத்துள்ளார்கள். கலவரம், கடையுடைப்பு, அண்டா திருட்டு இவைகளை மட்டும் தான் அவர்கள் தொடர்ச்சியாக செய்து கொண்டு இருக்கிறார்கள். இதை தாண்டிய வரலாறு அவர்களுக்கு என்ன இருக்கின்றது. அப்படி எதுவுமே இல்லாத காரணத்தால்தான் இன்று அவர்களுக்கு இத்தனை ஆண்டுகாலமாக பிடிக்காத நபர்களின் நினைவிடங்களுக்கும், பிடிக்காத கட்டடங்களுக்கும் ட்ரம்பை அழைத்து கொண்டு சென்றுள்ளார்கள். இதுதான் சங்ககளின் வரலாறு, அதைத்தாண்டி அவர்களிடம் வரலாறு என்று சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT