Skip to main content

"காஷ்மீரை வேட்டையாடிய நாக்கு இப்போது வட கிழக்கிற்கு சென்றுள்ளது.." - ஆளூர் ஷானவாஸ் பேட்டி!

Published on 19/12/2019 | Edited on 19/12/2019

நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஆளூர் ஷானவாஸிடம் பல்வேறு கேள்விகளை முன் வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் பதில்கள் வருமாறு,

இந்தியாவில் இருக்கும் சிறும்பான்மையினர் பாதுகாப்பு முக்கியமானது என்று கருதும்போது, வெளிநாடுகளில் உள்ள சிறும்பான்மை சமூகமாக உள்ள இந்துக்கள் பாதுகாக்க வேண்டும் என்று பாஜக அரசு நினைப்பதில் தவறு இருக்கிறதா? 

அதை யார் தடுத்தார்கள் என்று கூறுங்கள். பாகிஸ்தானில் இருந்து வரும் இந்துக்களுக்கு குடியுரிமை கொடுக்க கூடாது என்று யாராவது சொல்லியிருக்கிறார்களா? அங்கிருந்து வரும் சீக்கியர்களுக்கு குடியுரிமை வழங்க கூடாது என்றாவது யாராவது கூறியிருக்கிறார்களா? அப்படி யாராவது கூறியிருந்தால் சொல்லுங்கள். அப்படி யாருமே எங்கும் சொல்லவில்லையே. அப்படி ஒரு குரல் இந்தியாவில் ஒலித்ததா. அரசியல் அறிவற்றவன் கூட அப்படி சொல்லவில்லை. சாதாரண ஒரு பாமரன் கூட அப்படி சொல்லவில்லை. கொடுக்க கூடாது என கூறவில்லை. ஆனால், நீங்கள்தான் மத்தின் அடிப்படையில் மக்களை பிரித்து இவர்களுக்கெல்லாம் குடியுரிமை வழங்கப்படாது என்று கூறுகிறீர்கள். 

அமித்ஷா கிறிஸ்மஸ்க்கு பிறகு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவர இருக்கிறோம் என்று கூறுவதை பற்றி?

இப்போது ஏன் அமித்ஷா அதை சொல்கிறார் தெரியுமா, காஷ்மீரில் பெரும்பான்மையான மக்கள் முஸ்லிம்கள். இவர்கள் ஏற்கனவே இந்தியா முழுவதும் விதைத்து வைத்திருந்த முஸ்லிம் வெறுப்பின் மூலம் 370 சட்ட நீக்கத்தை சமாளித்துவிட்டார்கள். இதற்காக பெரிய அளவிலான போராட்டத்தை அவர்கள் எதிர்கொள்ளவில்லை. காஷ்மீருக்குள் அதற்காக எத்தகைய கொதிப்புணர்வு இருந்தாலும், அங்கு இருக்கும் அரசியல் தலைவர்களை எல்லாம் கைது செய்து அதனை அடைக்கி ஒடுக்கிவிட்டார்கள். காஷ்மீரை வேட்டையாடிய அந்த நாக்கின் ருசி வடகிழக்கையும் வேட்டையாடலாம் என்று அங்கு போனது. ஆனால் இந்த குடியுரிமை திருத்த மசோதா அங்கு போன வேகத்தில் திரும்பி வந்துள்ளது. 

போராட்டம் வன்முறையாக மாறுவதாக மத்திய அரசு தரப்பிலும், காவல்துறை தரப்பிலும் தெரிவிப்பதை பற்றி?

நம்முடைய தமிழ்நாட்டில் தான் நிறைய தடவை பார்த்திருக்கிறோம், போராட்டங்கள் எப்படி எல்லாம் வன்முறையாக யாரால் மாற்றப்படுகிறது என்று. போராட்டம் எப்படி வன்முறையாக மாறும். அவர்களுடைய நோக்கம் என்ன, மக்கள் பாதிக்கப்படும் ஒரு சட்டத்திற்கு எதிராக வீதிக்கு வந்து போராடுகிறார்கள். இதில் வன்முறையை நிகழ்த்த அவர்களுக்கு என்ன நோக்கம் இருந்துவிட போகிறது. காவல்துறையினர்தான்  கண்ணில் சிக்கியவர்களை எல்லாம் அடித்துள்ளார்கல். ஏதோ குற்ற செயலில் ஈடுபட்டவர்களை போல மாணவர்களை அவர்கள் கடுமையான முறையில் தாக்கியுள்ளார்கள். இது அனைத்திற்கும் அவர்கள் காலத்திடம் பதில் சொல்லத்தான் போகிறார்கள். பிரதமர் போராட்டத்தில் வன்முறை கூடாது என்று இப்போது சொல்கிறார், வன்முறை செய்வது யார்? தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டத்தில் யார் வன்முறை செய்தார்கள் என்று அவருக்கு தெரியாதா? தில்லி காவல்துறையினர் மாணவர்களை அடித்த வீடியோக்களை நாம் அனைவரும் பார்த்தோம். தமிழகத்தில் நடைபெற்றது போன்று அவர்கள் வாகனங்களை கொளுத்துவதையும் நாம் நேரடியாக பார்த்தோம். அதனால் வன்முறைக்கு யார் காரணம் என்று அனைவருக்கும் தெரியும்.
 

 

Next Story

“மோடி மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்” - தொல். திருமாவளவன் எம்.பி.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
A case should be filed against Modi and investigated  Thirumavalavan MP

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபடும் பிரதமர் நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும் நரேந்திர மோடி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். 

A case should be filed against Modi and investigated  Thirumavalavan MP

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா என்ற இடத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது நரேந்திர மோடி இஸ்லாமியர்களுக்கு எதிரான நச்சுக் கருத்துக்களை தெரிவித்துள்ளார். மேனாள் பிரதமர் மன்மோகன் சிங் பல ஆண்டுகளுக்கு முன்பு கூறிய கருத்துகளை  விஷமத்தனமாகத் திரித்து இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு வரும் விதமாகவும் அவர்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகவும் மோடி பேசியிருக்கிறார். மோடியின் பேச்சு தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானதாகவும் உள்ளது.

‘காங்கிரஸ் கட்சி பொதுமக்களிடம் உள்ள தங்கம் வெள்ளி முதலான சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்து அவற்றை இஸ்லாமியர்களுக்கு விநியோகம் செய்யத் திட்டமிட்டு இருக்கிறது’ என அப்பட்டமான ஒரு பொய்யை மோடி பேசி இருக்கிறார். ‘உங்கள் தேர்தல் அறிக்கையில் நீங்கள் என்ன சொல்லி இருக்கிறீர்கள்?. பொதுமக்களிடம் உள்ள தங்கத்தையெல்லாம் கைப்பற்றி எல்லோருக்கும் கொடுக்கப் போவதாக சொல்லி இருக்கிறார்கள். இதே காங்கிரஸ் ஆட்சி இருந்த போது நாட்டின் வளங்களில் இஸ்லாமியர்களுக்குத்தான் முதல் உரிமை இருக்கிறது என்று சொன்னார்கள்.

அப்படியென்றால் இப்போது பறிமுதல் செய்யும் சொத்துக்களை யாருக்கு கொடுக்கப் போகிறார்கள்? நாட்டில் அதிகமாகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறவர்களுக்கு,  நீங்கள் உழைத்து சம்பாதித்த வளத்தையெல்லாம் ஊடுருவல் காரர்களுக்குக் கொடுப்பதாகச் சொன்னார்கள். இதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? நம்முடைய தாய்மார்கள் சகோதரிகள் வைத்திருக்கும் தங்கத்தை எல்லாம் தேடி கணக்கெடுப்பு செய்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப் போகிறார்கள். அவர்களுக்குத்தான் சொத்துக்களில் முதல் உரிமை இருக்கிறது என்று மன்மோகன் சிங் சொன்னார். இது நகர்ப்புற நக்சலைட்டின் மனோபாவம். எனது தாய்மார்களே! சகோதரிகளே! காங்கிரஸ் கட்சி உங்களுடைய தாலியைக் கூட விட்டு வைக்காது’என பிரதமர் மோடி பேசியிருக்கிறார். 

A case should be filed against Modi and investigated  Thirumavalavan MP

நமது அரசமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஒற்றுமை மதச் சார்பின்மை ஆகிய கோட்பாடுகளுக்கு நேர் எதிரான பேச்சாக மோடியின் பேச்சு அமைந்துள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக மத ரீதியான வன்முறையைத் தூண்டுவதுதான் அவர்களது நோக்கம் என்பது தெளிவாகத் தெரிகிறது. பிரதமர் மோடியின் பேச்சு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 123 (3a) இன் கீழ் குற்றமாகும். இந்தப் பேச்சு தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் ஒன்றிய அரசால் வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கும் எதிரானதாகும். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153 ஏ, 154 பி, 298,504, 505 ஆகியவற்றின்படி இது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். இந்திய நாட்டில் நேர்மையாகத் தேர்தல் நடத்த வேண்டுமென்றால் தேர்தல் ஆணையம் நரேந்திர மோடி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை எவரும் மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.