மயிலாடுதுறை அதிமுக வேட்பாளர் ஆசைமணிக்கு வாக்கு கேட்டு சென்ற குட்டிவாகனம் (டாட்டா ஏஸ்) ஆற்றில் தடம்புரண்டு 4 பேர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர். இந்த சம்பவம் மயிலாடுதுறை தேர்தல் களத்தில் பெரும் பதட்டத்துடன் கடந்த பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்துள்ள குத்தாலம் கந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர், தனபால், அருள்தாஸ், விநாயகராஜா, மதியழகன், உள்ளிட்ட 30 க்கும் அதிகமானோர் டாட்டா ஏஸ் என்கிற குட்டியானை வாகனத்தில் அவர்கள் கிராமத்திலிருந்து, மங்கைநல்லூர் பகுதியில் நடந்த ஆசைமணிக்கு வாக்கு சேகரிப்பு ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றனர்.
அங்கு வாக்காளர்களுக்கு பணப் பரிவர்த்தனை, உள்ளிட்ட மது விருந்து கொடுக்கப் பட்டிருக்கிறது. பணத்தோடு குஷியாக மங்களூரில் இருந்து கோமல் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தனர், அதிக லோடு தாங்காமல் டயர் வெடித்து டாட்டா ஏஸ் ஆற்றில் புரண்டதால் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே இருந்துள்ளனர். மீதமுள்ளவர்களில் 15 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. ஏழு பேரை மயிலாடுதுறையிலும், நான்கு பேரை திருவாரூரிலும் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. வைத்துள்ளனர் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதனை கண்டித்து நியாயமான நீதி வேண்டும் இறந்தவர்கள் குடும்பத்திற்கு 25 லட்சம் நிவாரணம் வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதோடு மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர் சி. மோகன் குமார் தலைமையில் பேரணியாக சென்று மயிலாடுதுறை தேர்தல் அதிகாரியான கோட்டாட்சியரிடம் அதிமுக வேட்பாளர் ஆசைமணி சட்டவிரோதமாக கூட்டத்தை திரட்டியிருக்கிறார், லோடு வாகனத்தில் பயணிகளை ஏற்றக் கூடாது என உயர்நீதிமன்ற உத்தரவு இருந்தும் அதை மீறி வேட்பாளர் கூட்டத்தைத் திரட்டியிருக்கிறார். அதோடு அங்கு பணம் கொடுத்து அனுப்பியிருக்கிறார்.இந்த நான்கு பேர் இழப்பிற்கு வேட்பாளரே காரணம். திட்டமிட்டு கூட்டத்தை கூட்டி அவர்களின் இறப்பிற்கு காரணமாகியிருக்கிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது வேட்பாளரை தகுதிநீக்கம் செய்யவேண்டும்," என மனு கொடுத்துள்ளார்.
அதை வாங்கிக்கொண்ட கோட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய அமைப்பாளர் மோகன்குமார் உள்ளிட்டவர்களோ" நீதி கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம்" என ஆக்ரோஷமாக கூறிவிட்டு வந்துள்ளனர்.
அதன் பிறகே அதிமுக பூம்புகார் எம்எல்ஏ பவுன்ராஜ், மயிலாடுதுறை எம்எல்ஏ ராதாகிருஷ்ணன், சீர்காழி எம்எல்ஏ பாரதி, உள்ளிட்டவர்கள் தலையிட்டு உங்களின் குடும்பத்திற்கு நாங்கள் தான் உங்களுக்கு உதவி செய்ய முடியும், விடுதலை சிறுத்தைகளோ, திமுகவோ ஒன்றும் செய்துவிட மாட்டார்கள் உங்களை ஏமாற்ற பார்க்கிறார்கள் என கூறி உடலை பெற்றுச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து விசிக மோகன்குமார்," டாட்டா ஏஸ் வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடாது என்பது உயர்நீதிமன்ற உத்தரவு, அதோடு டாட்டா ஏஸ் விபத்து ஏற்பட்டால் பயணிகளை ஏற்றிச் செல்லும்போது அவர்களுக்கு இழப்பீடு தொகை வாங்க முடியாது என்பது தெரிந்தும் பூம்புகார் எம்எல்ஏ உங்களுக்கு இன்சூரன்ஸ் கிளைன் பண்ணி தரப்படும் என பொய்யான உத்தரவாதத்தை கொடுத்து அவர்களை ஏமாற்றி இருக்கிறார். அவர்களின் முகத்திரையை தேர்தலில் கிழிப்போம், " என்கிறார்.