ADVERTISEMENT

தொடரும் ராமாயண கதை - ராவணனாகும் ராக்கி பாய்?

04:56 PM Feb 01, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ராமாயணக் கதையைக் கொண்டு தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் முன்னரே வெளிவந்துள்ளன. இருப்பினும் தற்போது 3டி தொழில்நுட்பத்தில் ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து இந்தி மற்றும் தெலுங்கில் வருகிற ஜூன் 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது 'ஆதிபுருஷ்'. இப்படத்தில் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்திலும், கீர்த்தி சனோன் சீதை கதாபாத்திரத்திலும், சையிப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே கடும் விமர்சனத்தையும் கிண்டலையும் சந்தித்தது.

இதனிடையே 2019 ஆம் ஆண்டு, மது மன்டனா தயாரிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பெரிய பட்ஜெட்டில் ராமாயணம் கதையை எடுக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. அதற்கான ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் ராவணன் கதாபாத்திரத்தில் கே.ஜி.எஃப் யஷ்-ஐ நடிக்க வைக்க படக்குழு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் யஷ் தரப்பு என்ன பதிலளித்துள்ளது என்பது குறித்து எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT