kgf yash next movie titled as toxic

Advertisment

'கே.ஜி.எஃப்' படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான யஷ், 'கே.ஜி.எஃப் 2'-க்குப் பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை. இப்படம் வெளியாகி 1 வருடத்துக்கு மேல் ஆகியும் தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிடாமல் இருந்தார்யஷ். சமீபத்தில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பாலிவுட்டில் ராமாயணத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் ராவணனாக நடிக்க அவர் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியானது.

மேலும் மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும் கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கவுள்ளாதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் அது உறுதியாகியுள்ளது. யஷ் நடிக்கும் புது படத்தின்அறிவிப்பு வெளியாகியுள்ளது. கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகும் இப்படம், கோவாவில் போதைப் பொருள் நடத்தும் ஒரு கும்பலை மையப்படுத்தி ஒரு ஆக்‌ஷன் நிறைந்த படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

‘டாக்சிக்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் 2025ஆம் ஆண்டுஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தலைப்பு அறிவிப்பு வீடியோ வெளியாகியுள்ளது. இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் உலா வருகிறது.

Advertisment