ADVERTISEMENT

காதலர் தினத்தில் தமிழ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கீர்த்தி ஷெட்டி!

06:43 PM Feb 14, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழில் பல வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் லிங்குசாமி தற்போது பிரபல இளம் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்கும் 'தி வாரியார்' படத்தை இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ஶ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் ஆதி பின்னிஷெட்டி, நதியா, அக்‌ஷரா கௌடா, ஜெயபிரகாஷ், ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்ய, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். கடந்த ஜூலை மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது கீர்த்தி ஷெட்டியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான இந்த போஸ்டரில் கீர்த்தி ஷெட்டி, சர்ட் மற்றும் ஜீன்ஸுடன் ஸ்கூட்டர் ஓட்டிக் கொண்டிருக்கிறார். கீழே கீர்த்தி ஷெட்டி இப்படத்தில் தோன்றும் கதாப்பாத்திரத்தின் பெயரான விசில் மஹாலக்‌ஷ்மி எனும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. தெலுங்கு படமான உப்பென்னா மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமான கீர்த்தி ஷெட்டியின் முதல் தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT