lingusamy movie the warrior dubbing rights update

Advertisment

தமிழில் பல வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் லிங்குசாமி தற்போது பிரபல இளம் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்கும் தி வாரியார் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ஶ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் ஆதி பின்னிஷெட்டி, நதியா, அக்‌ஷரா கௌடா, ஜெயபிரகாஷ், ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்ய, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். கடந்த ஜூலை மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்புமுழு வீச்சில் தொடங்கிநடைபெற்று வருகிறது. சமீபத்தில் வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையேநல்ல வரவேற்பைபெற்றது.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் இந்தி டப்பிங் உரிமை ரூ.16 கோடிக்கு விற்கப்பட்டுசாதனை படைத்துள்ளது. இது படத்தின் நடிகர்ராம்பொத்தினேனி சினிமா வாழ்க்கையில் அதிக விலைக்கு விற்கப்பட்ட முதல் திரைப்படம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.