lingusamy Warriorr film poster goes viral

Advertisment

தமிழில் பல வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் லிங்குசாமி தற்போது பிரபல இளம் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்கும் 'தி வாரியார்' படத்தை இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ஶ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் ஆதி பின்னிஷெட்டி, நதியா, அக்‌ஷரா கௌடா, ஜெயபிரகாஷ், ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்ய, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் வெளியான போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் சிறப்பு போஸ்டரைபடக்குழு வெளியிட்டுள்ளது. ஸ்டைலிஷ் லுக்கில் போலீஸ் கெட்டப்பில் ராம்பொத்தினேனிமாஸாக தோன்றும் இந்த போஸ்டர் பலரதுகவனத்தை பெற்று வருகிறது. இப்படம் ஜூலை மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதுகுறிப்பிடத்தக்கது.