ADVERTISEMENT

கருத்துரிமை படத்தில் விஜய் சேதுபதி - போஸ்டர் வெளியீடு     

10:52 AM Nov 04, 2020 | rajapathran@na…

ADVERTISEMENT

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகன் விஜய் சேதுபதி. இருப்பினும் கதை மற்றும் கதாபாத்திரம் பிடித்திருந்தால், கதாநாயகனாக மட்டுமில்லமால் மற்ற முக்கிய பாத்திரங்களில் நடிப்பவர். அவ்வாறு ரஜினி நடித்த 'பேட்ட' படத்தில் வில்லனாக நடித்தார். தற்போது விஜய்யின் 'மாஸ்டர்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சில படங்களில் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார் விஜய் சேதுபதி.

ADVERTISEMENT

விஜய் சேதுபதி தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். அடுத்ததாக இந்தி திரையுலக நட்சித்திரமான ஆமிர் கானுடன் லால் சிங் சேட்டா என்ற படத்திலும் நடிக்கவுள்ளார். இந்த நிலையில், தான் மலையாளத்தில் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதி நடிக்கும் இந்த புதிய படத்திற்கு 19 (1) (a) என பெயரிடப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சட்டப்பிரிவு 19 (1) (a) என்பது இந்திய குடிமக்களுக்கு கருத்துரிமை வழங்குவதாகும். முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமான 800 படத்தில் நடிக்க, விஜய் சேதுபதிக்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது. அதனால் விஜய் சேதுபதி, அப்படத்திலிருந்து விலகினார். அதைத்தொடர்ந்து கருத்துரிமை பற்றிய விவாதங்கள் எழுந்தன. இந்தநிலையில் விஜய் சேதுபதி கருத்துரிமை தொடர்பான படத்தில் நடிக்கவுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . 19 (1) (a) படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் நித்யா மேனன் நடிக்கிறார். வி.எஸ். இந்து இயக்கம் இப்படத்திற்கு, கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இவர் விஜய் சேதுபதி -திரிஷா நடித்த 96 படத்திற்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT