/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/548_1.jpg)
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன்,விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் விக்ரம். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடவுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடலானபத்தல பத்தல பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும் மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் இருப்பதாக கூறி கமல்ஹாசன் மீதும் புகாரும்அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டுவிழா நேற்று நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினருடன் உதயநிதி ஸ்டாலின், சிம்பு ஆகியோரும் கலந்து கொண்டார். இவ்விழாவில் பேசிய விஜய் சேதுபதி, "கமல் சாருடன்நான் நடிப்பேன் என்று கனவில் கூட எதிர்பார்க்கவில்லை. ஆனால்விக்ரம் படத்தில் நடித்துவிட்டேன். கமல் சார் நடித்த 'நம்மவர்' படத்தின் ஆடிசனுக்கு சென்றிருந்தேன், ஆனால் என்னுடைய உயரம் காரணமாக எனக்கு அந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்படிப்பட்ட கமல் சாருடன் சேர்ந்து நடிச்சதுநான் செய்த புண்ணியம். கமல் சார் அடுத்ததாக உங்க இயக்கத்தில் நான் ஒரு படம் நடிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)