tuglaq

விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல படங்களில் நடித்து வருகிறார், அதில் ஒரு படம்தான் ‘துக்ளக் தர்பார்’.

Advertisment

புதுமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இப்படத்தை இயக்க, ஆர். பார்த்திபன், அதித்திராவ் ஹைதாரி, மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

Advertisment

பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படத்தினை செவன் ஸ்கிரீன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் வியாகாம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றனர். விஜய் சேதுபதியின் '96' படத்தைத் தொடர்ந்து கோவிந்த் வசந்தாதான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

அண்மையில் இப்படம் குறித்து செவன் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் அப்டேட் வெளியிட்டது. அதில், இப்படத்தின் ஷூட்டிங் 35 நாட்கள் மட்டுமே முடிவடைந்திருப்பதாகவும் மீதம் 40 நாட்களுக்கு ஷூட்டிங் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தது.

Advertisment

இந்நிலையில் நேற்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து படத்திலிருந்து சில புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. வெள்ளை வேட்டி, சட்டை என்று அரசியல்வாதியாக விஜய்சேதுபதி மற்றும் பார்த்திபன் தோன்றுகிறார்கள்.

இந்நிலையில், அதில் ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ள பார்த்திபன், “நானும் ரவுடிதான், நீயும் ரவுடிதான். இன்னைக்கு உன் துக்luck தர்பார் எவ்வளவு பெரிய Level-ல இருக்குன்னு எனக்குத் தெரியாதுன்னு நினைச்சுகிட்டு” இந்தப் பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா”ங்கிற Range-க்கு பவ்யமா கையைக்கட்டிகிட்டு நின்னா என்ன அர்த்தம்? உன் MASTER plan தான் என்ன?” என்று பதிவிட்டுள்ளார்.