ADVERTISEMENT

அயர்ன் மேனுக்குப் பிறகு மீண்டும் டப்பிங்கில் குதித்த விஜய் சேதுபதி! 

04:17 PM Nov 21, 2020 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

விஜயநகர அரசர் கிருஷ்ணா தேவராயரின் அரசவையில், விகடகவியாக இருந்தவர் தெனாலி ராமன். இவரின் புத்திசாலித்தனம் மற்றும் சமயோசிதம் குறித்த கதைகள், இன்று வரை குழந்தைகளிடம் மிகவும் பிரபலம்.

தெனாலிராமன் கதைகளை அடிப்படையாகக் கொண்டு, ஏற்கனவே தமிழில் திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. இந்தநிலையில் தற்போது, 'தீர : புத்தி ரித்தி சித்தி' என்ற பெயரில், தெனாலிராமனை மையமாக வைத்து, மோஷன் கேப்ச்சர்-அனிமேஷன் படமாக உருவாகியுள்ளது. ஒரு மணி நேரம் 57 நிமிடங்கள் ஓடும் இப்படம், அமேசான் ப்ரைமில் வெளியாகிவுள்ளது.

இப்படத்தில், தெனாலிராமன் கதாபாத்திரத்துக்கு, நடிகர் விஜய் சேதுபதி பின்னணிக் குரல் அளித்துள்ளார். ஏற்கனவே விஜய் சேதுபதி, 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' படத்தில், அயர்ன் மேனுக்கு டப்பிங் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT