vijaysethupathi

டெல்லி பிராசத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'துக்ளக் தர்பார்'. இப்படத்தை லலித் தயாரிக்க, கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இப்படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து ரிலீசிற்குத் தயாராகிவந்த நிலையில், கரோனா இரண்டாம் அலை காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இதையடுத்து, படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவெடுத்தது.

Advertisment

இது தொடர்பாக சில முன்னணி ஓடிடி நிறுவனங்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஓடிடியில் வெளியாகும் அதே தினத்தன்றே படத்தை சன் டிவியிலும் ஒளிபரப்ப படக்குழு முடிவெடுத்துள்ளது. இதற்காக சன் தொலைக்காட்சியுடனும் பெரிய தொகைக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த நிலையில், 'துக்ளக் தர்பார்' படத்தின் ட்ரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் 31ஆம் தேதி 'துக்ளக் தர்பார்' படத்தின் ட்ரைலர் வெளியாகவுள்ளது.

Advertisment