பிரபல தயாரிப்பாளர் வெங்கட்ராம ரெட்டி தன்னுடைய 75வயதில் காலமானார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தமிழ் திரையுலகில் மிகவும் பழமைவாய்ந்த தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று விஜயா வாகினி புரொடக்ஷன்ஸ். கடந்த 1948 ஆம் ஆண்டு சென்னை வடபழனியில் தொடங்கப்பட்ட இவ்நிறுவனம் இப்போதுவரை பல படங்களைத் தொடர்ச்சியாக தயாரித்து வருகிறது. எங்க வீட்டுப் பிள்ளை, உழைப்பாளி, வீரம், பைரவா உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்துள்ளனர்.
இந்த நிறுவனத்தை பி.நாகிரெட்டி மறைவுக்குப் பின்னர் அவரது இளைய மகன் பி.வெங்கட்ராம ரெட்டி நிர்வகித்து வந்தார். இவரது மேற்பார்வையில் தான் ‘தாமிரபரணி’ முதல் ‘பைரவா’படங்கள் வரை தயாரிக்கப்பட்டது. இவரின் மேற்பார்வையில் தற்போது விஜய் சேதுபதியை வைத்து சங்கத்தமிழன் தயாராகி வருகிறது. இது வெங்கட்ராம ரெட்டியின் கீழ் உருவாகும் ஆறாவது படம் ஆகும்.
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த வெங்கட்ராம ரெட்டி நேற்று மதியம் 1 மணியளவில் காலமானார். இவரது இறுதிச் சடங்குகள் இன்று காலை நெசப்பாக்கத்தில் நடைபெற்றது.