ADVERTISEMENT

தமிழக முதல்வரிடம் விவேக் மனைவி வைத்த கோரிக்கை !

02:44 PM Apr 25, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

1987- ஆம் ஆண்டு வெளியான மனதில் உறுதி வேண்டும் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் விவேக். சினிமாவில் வெறும் நகைச்சுவை மட்டுமின்றி, சமூகங்களில் நிகழ்ந்த அவலங்களை தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்தினார். மேலும், மக்களைச் சிந்திக்க வைக்கும் வகையில் நகைச்சுவை கலந்த வசனங்களையும் பேசி ரசிக்க வைத்தார். நகைச்சுவையுடன் தனது படங்களில் சமூக கருத்துக்களை பேசி வந்த விவேக்கை மக்கள் அன்போடு சின்ன கலைவாணர் என்று அழைத்தனர். நடிப்பை தாண்டி பல லட்ச மரக்கன்றுகளை தமிழகம் முழுவதும் நட்டு வைத்த நடிகர் விவேக், இளைஞர்கள் மரக்கன்றுகளை அதிகளவில் நட வேண்டும் என்று ஊக்கப்படுத்தினார்.

இந்த நிலையில் கடந்த 2021- ஆம் ஆண்டு ஏப்ரல் 17- ஆம் தேதி அன்று மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் திடீர் மரணம் அடைந்தது ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சமீபத்தில் அவரின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் விவேக்கின் மனைவி அருட்செல்வி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், விருகம்பாக்கத்தில் நடிகர் விவேக் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT