
நடிகர் விவேக் திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்ற வாரம் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஏப்ரல் 17 அன்று அதிகாலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரின் இந்த திடீர் மறைவுக்குப் பிரபலங்கள் பலரும் சமூகவலைதளங்களில் இரங்கல் தெரிவித்தனர். மேலும் பிரபலங்கள் பலரும் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தனர். அதே போல் விவேக்கின் மறைவையொட்டி பலரும் மரக்கன்றுகளை நட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, நடிகர் விவேக்கின் மறைவு அன்று நடிகர் விஜய் ஜார்ஜியாவில் நடக்கும் 'தளபதி 65' படப்பிடிப்பில் இருந்தார். இதனால் அவர்நேரில் சென்று அஞ்சலி செலுத்தமுடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், ஜார்ஜியாவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு நேற்று (25.04.2021) சென்னை திரும்பிய நடிகர் விஜய், மறைந்த விவேக் குடும்பத்தினரை இன்று காலை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். சாலிகிராமத்தில் உள்ள விவேக்கின் இல்லத்திற்கு சென்ற விஜய், அங்கு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)