asfasfdas

விழுப்புரம் தொகுதிக்குட்பட்ட கீழ்பெரும்பாக்கம், சின்னமடம், அரியலூர், பூசாரிப்பாளையம், தென்குச்சிபாளையம், பில்லூர் ஆகிய புறநகர் மற்றும் நகர கிராம மக்களின் வேண்டுகோளை ஏற்று கடந்த ஏழு வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வழித்தடத்தில் போக்குவரத்து சேவை முதலமைச்சர் உத்தரவையடுத்துமீண்டும் துவங்கப்பட்டுள்ளது.

Advertisment

இதனை மத்திய மாவட்ட கழக செயலாளரும், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினருமான நா.புகழேந்தி, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் இரா.இலட்சுமணன் ஆகியோர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இந்த நிகழ்வில் அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisment