ADVERTISEMENT

இணையத்தில் வைரலாகும் 'பீஸ்ட்' ஃபேர்வெல் !

06:00 PM Dec 11, 2021 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய், நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'பீஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நிறைவு செய்த படக்குழு, இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா சென்றது. அங்கு ‘பீஸ்ட்’ படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. அதன் பிறகு சென்னை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் படத்தின் படப்பிடிப்பை முழு வீச்சில் படக்குழு நடத்தி வந்தது.

இந்நிலையில் படக்குழு படத்தின் முக்கிய அறிவிப்புடன் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் பீஸ்ட் படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் இன்றோடு முடிவடைந்துள்ளதாக கூறியுள்ளது அத்துடன் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் மற்றும் விஜய் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டி தழுவிக் கொள்ளும் படியான புகைப்படத்தையும் படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT